உச்சகட்ட இரத்த கொதிப்பில் ஏர்டெல்; குடியரசு கொண்டாட்டத்தில் ஜியோ.!

|

இந்திய டெலிகாம் துறையில் நிலவும் தீவிரமான கட்டண யுத்தத்திற்கெல்லாம் ஆதி காரணமாக இருந்தாலும் கூட, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடும் போட்டியையும், நெருக்கடிகளையம் தொடர்ச்சியான முறையில் சந்தித்து வருகிறது.

உச்சகட்ட இரத்த கொதிப்பில் ஏர்டெல்; குடியரசு கொண்டாட்டத்தில் ஜியோ.!

அதற்கு பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற இதர டெலிகாம் நிறுவனங்களும், அவைகளின் அதிரடியான மற்றும் மலிவான கட்டண திட்டங்களுமே காரணமாகும். இருப்பினும் கூட, சவாலை ஏற்கத்தயங்காத ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, டெலிகாம் மார்க்கெட்டில் நாங்கள் தான் "லீடர்" என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் அதன் புதிய சந்தைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு திட்டத்திலும்

ஒவ்வொரு திட்டத்திலும்

ரிலையன்ஸ் ஜியோவின் படி, இந்த புதிய திட்டங்களானது அதன் முந்தைய திட்டங்களை (ஒவ்வொரு திட்டத்திலும்) ரூ.50/- என்கிற அளவிலான விலைக்குறைப்பை நிகழ்த்தியதோடு 50 சதவிகிதம் கூடுதல் டேட்டா என்கிற அளவில் அதன் நன்மையையும் அதிகரித்துள்ளது. ஜியோ குடியரசு தின 2018 என்ற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள திட்டங்கள் என்னென்ன.? அவைகளின் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ரூ.98/-ல் தொடங்கி ரூ.498/- வரை

ரூ.98/-ல் தொடங்கி ரூ.498/- வரை

ரிலையன்ஸ் ஜியோ குடியரசு தின 2018 திட்டங்களானது ரூ.98/-ல் தொடங்கி ரூ.498/- வரை செல்கிறது. ரூ.98/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி தரவை இனி மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். முன்னர் இதே திட்டமானது 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் இப்போது அதன் செல்லுபடி காலம் இரட்டிப்பாக்க பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
28 நாட்களுக்கு செல்லுபடி

28 நாட்களுக்கு செல்லுபடி

முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, ரூ.50/- என்கிற அளவில் விலைக்குறைப்பும் மற்றும் 50% கூடுதல் டேட்டாவும் பெறும் திட்டங்களை பொறுத்தமட்டில் ரூ.199/-க்கு கிடைத்த ஜியோ திட்டமானது இனி ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது முன்னர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலாக 28ஜிபி டேட்டாவை வழங்கியது இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான மொத்தம் 42ஜிபி டேட்டாவை வழங்கும்.

70 நாட்களுக்கு செல்லுபடி

70 நாட்களுக்கு செல்லுபடி

அதேபோல ரூ.399/-க்கு கிடைத்த ஜியோ திட்டமானது இனி ரூ.349/-க்கு கிடைக்கும். மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது முன்னர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலாக 70ஜிபி டேட்டாவை வழங்கியது இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான மொத்தம் 105 ஜிபி டேட்டாவை வழங்கும்.

84 நாட்களுக்கு செல்லுபடி

84 நாட்களுக்கு செல்லுபடி

முன்னர் ரூ.459/-க்கு கிடைத்த ஜியோ திட்டமானது இனி ரூ.399/-க்கு கிடைக்கும். மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானதும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலாக 84ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான மொத்தம் 126 ஜிபி டேட்டாவை வழங்கும்.

91 நாட்களுக்கு செல்லுபடி

91 நாட்களுக்கு செல்லுபடி

அதேபோல ரூ.509/-க்கு கிடைத்த ஜியோ திட்டமானது இனி ரூ.449/-க்கு கிடைக்கும். மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது முன்னர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலாக 91ஜிபி டேட்டாவை வழங்கியது இனி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான மொத்தம் 136 ஜிபி டேட்டாவை வழங்கும்.

மொத்தம் 56ஜிபி

மொத்தம் 56ஜிபி

முன்னதாக, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா வழங்கும்ஒரு திட்டம் மட்டுமே ஜியோவிடன் இருந்தது. இந்த அறிவிப்பின் கீழ் இதுவரை நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கிய திட்டங்களெல்லாம் இனி 2ஜிபி டேட்டாவை வழங்கும் ஆக ஜியோவின் ரூ.198/- ஆனது இனி மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 2ஜிபி என்கிற விகிதத்தில் மொத்தம் 56ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

மொத்தம் 140ஜிபி

மொத்தம் 140ஜிபி

மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஜியோவின் ரூ.398/- ஆனது இனி நாள் ஒன்றிற்கு 2ஜிபி என்கிற விகிதத்தில் மொத்தம் 140ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதற்கு முன்னர் இதே திட்டம் இதே செல்லுபடிக்காலத்தின் கீழ் 105ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 168ஜிபி

மொத்தம் 168ஜிபி

மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஜியோவின் ரூ.448/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 2ஜிபி என்கிற விகிதத்தில் மொத்தம் 168ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதற்கு முன்னர் இதே திட்டம் இதே செல்லுபடிக்காலத்தின் கீழ் 126ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 182ஜிபி

மொத்தம் 182ஜிபி

அதேபோல மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஜியோவின் ரூ.498/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 2ஜிபி என்கிற விகிதத்தில் மொத்தம் 182ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதற்கு முன்னர் இதே திட்டம் இதே செல்லுபடிக்காலத்தின் கீழ் 136ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியும், அழுத்தமும் மீண்டும் அதிகரித்துள்ளது

நெருக்கடியும், அழுத்தமும் மீண்டும் அதிகரித்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அதிரடியான திருத்தங்களின் விளைவாக இதர டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மீதான நெருக்கடியும், அழுத்தமும் மீண்டும் அதிகரித்துள்ளது. அட்டகாசமான திருத்தங்களை நிகழ்த்தி ஜியோவின் நன்மைகளுடன் தனது நன்மைகளை சமன் செய்த ஏர்டெல் நிறுவனம் இப்போது மீண்டும் பின்னால் தள்ளப்பட்டுள்ளது. இதற்கான பதிலடியாக வெளியாகும் திட்டங்களை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Introduces Republic Day 2018 Plans, Rs 98 Tariff Plan Gives 2GB Data, Unlimited Voice Calls for 28 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X