Home
News

ரூ.499/-க்கு ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டம் அறிமுகம்.!

இலவச சேவையிலிருந்து கட்டண சேவையாக மாறிய பின்னர், ரூ.399/- என்ற ரீசார்ஜ் பேக் தான் பெரும்பாலான பயனர்களுக்கான பிரதான ரீசார்ஜ் திட்டமாக திகழ்ந்தது.

By Muthuraj

சமீபத்தில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களில் சில கடுமையான மற்றும் தன்னிச்சையான மாற்றங்களைக் கொண்டுவந்தது.

ரூ.499/-க்கு ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் & போஸ்ட்பெயிட் திட்டம் அறிமுகம்

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஜியோ திட்டங்களின் மீதான மாற்றங்களில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியது ரூ.399/- திட்டம் தான். இலவச சேவையிலிருந்து கட்டண சேவையாக மாறிய பின்னர், ரூ.399/- என்ற ரீசார்ஜ் பேக் தான் பெரும்பாலான பயனர்களுக்கான பிரதான ரீசார்ஜ் திட்டமாக திகழ்ந்தது. தற்போது அந்த திட்டம் அதே நன்மைகளுடன் ரூ.459/-க்கு கிடைக்கிறது.

128கேபிபிஎஸ் -64கேபிபிஎஸ் ஆக வேகக்குறைப்பு.!

128கேபிபிஎஸ் -64கேபிபிஎஸ் ஆக வேகக்குறைப்பு.!

இந்நிலைப்பாட்டில் நேற்று ஜியோ வழங்கும் குறிப்பிட்ட வரம்பிற்கு பின்னாலான வேகமானது 128கேபிபிஎஸ்-ல் இருந்து 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. 4ஜி சேவைக்கு மிக மிக வேகமாக முன்னேறிய பெரும்பாலான இந்திய பயனர்களை பொறுத்தமட்டில் ஜியோவின் இந்த வேகக்குறைப்பு முடிவானது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும்.

புதிய ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் அறிமுகம்.!

புதிய ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் அறிமுகம்.!

இதையெல்லாம் மனதிற்கொண்டு ரிலையன்ஸ் ஜியோ இன்று அதன் புதிய ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்னென்ன.? செல்லுபடிக்காலம் என்ன.? இந்த திட்டம் பழைய ரூ.399/- திட்டத்தை போலவே ஒரு பிரதான ரீசார்ஜ் பேக் ஆக உருமாற வாய்ப்புகள் உண்டா.?

நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா.!

நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா.!

அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோவின் புதிய திட்டமானது ரூ.499/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இந்த திட்டம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெறுவார்கள்.

காம்ப்ளிமெண்ட்ரி சந்தா.!

காம்ப்ளிமெண்ட்ரி சந்தா.!

ஆக மொத்தம் இந்த திட்டத்தின் கீழ் 91ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். இது தவிர, பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான காம்ப்ளிமெண்ட்ரி சந்தாவையும் பெறுவார்கள். இப்போது, இந்த ​​திட்டம் மைஜியோ பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது.

இது ரூ.459 திட்டத்தை ஒத்திருக்கிறது.!

இது ரூ.459 திட்டத்தை ஒத்திருக்கிறது.!

ஆர்வமூட்டும் வகையில், திட்டமானது ரூ.459 திட்டத்தை ஒத்திருக்கிறது, இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் போஸ்ட்பெயிட் பயனர்கள், 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை நாள் ஒன்றுக்கு என மொத்தம் 3 மாதங்களுக்கு பெறலாம். ப்ரீபெயிட் பயனர்கள் அதே அளவிலான டேட்டா வரம்பை மொத்தம் 84 நாட்களுக்கு பெறுவர். உடன் பயனர்கள் ஜியோ ஆப்ஸ்களையும் அணுகலாம்.

ரூ.509/- திட்டம்.!

ரூ.509/- திட்டம்.!

ஜியோ ரூ.509/- திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு 49 நாட்களுக்கு செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகின்றது என்பதும் ரூ.999.-க்கு 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் 60 ஜிபி அஃளவிலான தரவை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.1999/- திட்டம்.!

ரூ.1999/- திட்டம்.!

6 மாத காலம் செல்லுபடியாகும் ரூ.1999/- திட்டமானது மொத்தம் 125ஜிபி அளவிலான அதிகபட்ச வேகம் தரும் டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் ரூ.4999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட வருடாந்திர திட்டமானது மொத்தம் 350ஜிபி எ;அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கும்

Best Mobiles in India

English summary
Reliance Jio introduces a new Rs 499 plan for prepaid and postpaid users. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X