ஆப்பிள் தயாரிப்புகளின் மீது அதிரடியான சலுகைகளை வழங்கிய கையோடு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன் மீதான நம்பமுடியாத சலுகைகளை அறிவித்துள்ளது.

ஜியோ.காம் & ரிலையன்ஸ் டிஜிட்டல் சில்லறை கடைகளில் மிகவும் எதிர்பார்க்கக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு சேர்த்து அக்கருவி மீது 70% வரையிலான பைபேக் வாய்ப்பும் திறந்து விடப்பட்டுள்ளது. இச்சலுகையை பெறுவது எப்படி.? இதன் விதிமுறைகள் மற்றும் செல்லுபடி காலம் ஆகிய விவரங்களை பற்றி காண்போம்.
ரூ.6,000/- என்கிற கேஷ்பேக்.!
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.6,000/- என்கிற கேஷ்பேக் கொடுக்கும் நிலைப்பாட்டில் பைபேக் சலுகையானது, இந்த ஒப்பந்தத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது.
குறைந்தபட்சம் ரூ.2500/- அளவிலான ரீசார்ஜ்.!
ஆகமொத்தம், இந்த வாய்ப்பின் கீழ் 70% அளவிலான சலுகையை ஒரு வாடிக்கையாளர் பெற முடியும். இதனை பெறவிரும்பும் நுகர்வோர், ஜியோ இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அவருக்கு கிடைக்கக்கூடிய ஜியோ திட்டங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ரூ.2500/- அளவிலான ரீசார்ஜ்களை நிகழ்த்த வேண்டும்.
1டிபி அளவிலான டேட்டா.!
இந்த வாய்ப்புடன் சேர்த்து கேலக்ஸி எஸ்9, எஸ்9 ப்ளஸ் கருவிகளின் மீது கிடைக்கும் பிரத்யேக ஜியோ வாய்ப்பொன்றும் நுகர்வோர்களுக்கு தேர்வு செய்ய கிடைக்கும். இந்த வாய்ப்பின் கீழ் 1டிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து ஜியோவின் இதர அனைத்து நன்மைகளும் ஒரு வருடத்திற்கு அணுக கிடைக்கும்.
மிட்நைட் பிளாக் நிற விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது.!
அதாவது ரூ.15,000/- மதிப்புள்ள நன்மைகள் வெறும் ரூ.4,999/-க்கு அணுக கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருவர் ஜியோப்ரைம் உறுப்புனராகவும் ஆகலாம். இந்த ஜியோ வாய்ப்பின்கீழ், ரூ.72,900/- என்ற அசல் விலைக்கு தான் சாம்சங் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனின் 256ஜிபி மாறுபாட்டை வாங்க வேண்டும் என்பதும், மிட்நைட் பிளாக் நிற விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 16, 2018 அன்று அல்லது அதற்கு பின்.!
சலுகையை பற்றி பேசுகையில், ஒரு வாடிக்கையாளர் மார்ச் 16, 2018 அன்று அல்லது அதற்கு பின்னாலான தேதிகளில் ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது ரிலையன்ஸ் டிஎக்ஸ் மினி / ஜியோ ஸ்டோர் அல்லது ஜியோ.காம் வழியாக எஸ்9 ப்ளஸ் சாதனத்தை வாங்கி, ஜூன் 15, 2018-க்கு முன்னர் ஜியோ சந்தாதாரராக வேண்டும்.
மைஜியோ பயன்பாட்டின் வழியாக பைபேக் வவுச்சர்கள்.!
நேற்று (மார்ச் 16, 2018) தொடங்கி வருகிற ஜூன் 15, 2019 வரை கிடைக்கும் இந்த பைபேக் வாய்ப்பில் ரூ.500/- என்கிற பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். சாதனத்தின் கொள்முதல் தேதியில் இருந்து அடுத்த 12 மாதங்கள் வரை செய்யப்படும் தொடர்ச்சியான ரீசார்ஜ்களுக்கு பிறகு உங்களின் மைஜியோ பயன்பாட்டின் வழியாக பைபேக் வவுச்சர்கள் வரவு வைக்கப்படும். அவைகள் உங்களுக்கான பைபேக் சலுகையைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஜியோ ஸ்டோருக்கு வருகை தந்து.!
அதன் பின்னர் வாங்கிய கருவியின் அசல் விலைப்பட்டியல், ரீடெயில் பாக்ஸ் மற்றும் சாதனத்தை வாங்கும் நேரத்தில் வழங்கப்பட்ட எல்லா ஆக்சஸெரீஸ்களுடன் சேர்த்து மைஜியோ பயன்பாடு வழியாக பெற்ற வவுச்சர்கள் ஆகியவைகளை எடுத்துகொன்டு ரிலையன்ஸ் ஜியோ ஸ்டோருக்கு வருகை தந்து பைபேக் வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.
கூறப்பட்டுள்ள முழு காலத்திற்கும்.!
இந்த வாய்ப்பானது புதிய மற்றும் ஏற்கனவே சேவையில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இந்த வாய்ப்பின் முழுமையான நன்மையை பெற, கூறப்பட்டுள்ள முழு காலத்திற்கும் பயனர்கள் ஜியோ நெட்வொர்க் உடன் தங்க (அல்லது இணைந்திருக்க) வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். மேலும் பல டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.