இனி டேட்டா முடுஞ்சுடும்னு கவலைப்படவே வேணாம்.. மலிவு விலையில் ஜியோவின் 5 புதிய திட்டங்கள்..

|

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒருவராகச் சிறந்து விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பயனர்களுக்காகப் புதிதாக 5 புதிய திட்டங்களை ஃப்ரீடம் பிளான்ஸ் (Freedom plans) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐந்து புதிய திட்டங்களும் 'தினசரி வரம்பு இல்லாத' ப்ரீபெய்ட் மொபிலிட்டி நன்மைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஒப்பிடும் போது இது டேட்டா சேவைக்கான எந்தவொரு வரப்பும் இல்லாமல் கூடுதல் வேலிடிட்டியுடன் வருகிறது.

ரூ .127 முதல் துவங்கி ரூ. 2397 விலை வரை புதிய திட்டங்கள்

ரூ .127 முதல் துவங்கி ரூ. 2397 விலை வரை புதிய திட்டங்கள்

ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜியோ பட்டியலிட்டுள்ள புதிய திட்டங்கள் மலிவு விலையான ரூ .127 முதல் துவங்கி ரூ. 2397 விலை வரை செல்கிறது. ஆரம்ப விலை திட்டமான ஜியோ ரூ. 127 திட்டமானது 15 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 12 ஜிபி டேட்டா நன்மையை FUP தினசரி வரம்பு இல்லாமல் திட்டத்தின் செல்லுபடி காலம் முடியும் வரை வழங்குகிறது.

புதிய 'no daily limit' திட்டங்கள்

புதிய 'no daily limit' திட்டங்கள்

அதேபோல், பட்டியலில் உள்ள மற்ற 5 திட்டங்கள் 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ சுதந்திரத் திட்டங்களின் கீழ் ஐந்து புதிய 'no daily limit' என்ற பெயரில் தினசரி வரம்பு இல்லாத ப்ரீபெய்ட் மொபிலிட்டி நன்மைகளுடன் டிஜிட்டல் வாழ்க்கைக்குக் கூடுதல் விருப்பங்களைக் கொண்டு வரும் சிறந்த திட்டங்களாக இது இருக்கிறது என்று தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 SMS நன்மையும் இதில் இருக்கா?

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 SMS நன்மையும் இதில் இருக்கா?

புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள், 28 நாள் மற்றும் பல செல்லுபடியாகும் முந்தைய பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலல்லாமல் 30 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மை உடன் வருகிறது. இந்த ஐந்து புதிய திட்டங்களும் தினசரி வரம்பு இல்லாத டேட்டா நன்மை உடன், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் செல்லுபடியாகும் வேலிடிட்டி நாட்கள் வரை தொடர்ந்து வழங்குகின்றது.

இனி தினசரி வரம்பு பற்றிய கவலையே வேண்டாம் போலயே

இனி தினசரி வரம்பு பற்றிய கவலையே வேண்டாம் போலயே

இந்த 'தினசரி வரம்பு இல்லாத' திட்டங்கள் உயர் தரவு பயனர்களுக்குக் கூடுதல் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இது தினசரி வரம்பு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் தடையற்ற டேட்டா பயன்பாட்டை அனுபவிக்க அனுமதிக்கிறது. அதே நேரத்தில், 30 நாள் செல்லுபடியாகும் சுழற்சி ரீசார்ஜ் தேதியை நினைவில் கொள்வதை எளிதாக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஜியோவின் பிற நன்மைகளும் இந்த திட்டங்களுடன் உங்களுக்குக் கிடைக்கிறது.

ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..

ஜியோவின் ரூ .247 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன?

ஜியோவின் ரூ .247 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன?

இந்த திட்டங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஜியோவின் தகவல் மற்றும் பயன்பாட்டுப் பயன்பாடுகளுக்கான ஜியோ ஆப்ஸ் அணுகலைத் தடையின்றி வழங்குகின்றது. ஜியோவின் வலைத்தளத்தின் தகவல்களின்படி, ரூ .247 விலையுள்ள இந்த திட்டத்தில் தினசரி வரம்புகள் இல்லாமல் 30 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் உங்களுக்கு மொத்தமாக 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது.

 ரூ .447 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ரூ .447 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

மற்ற திட்டங்களைப் பற்றிப் பார்க்கையில், ஜியோவின் ரூ. 247 திட்டத்திற்கு அடுத்தபடியா இருப்பது ரூ .447 திட்டமாகும். இந்த திட்டமானது பயனர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 50 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இத்துடன் இதில் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 SMS ஆகியவையும் கிடைக்கிறது.

இந்த ஊரடங்கில் Vi டபுள் டேட்டா பேக் தான் நமக்கு சரியானது.. இவ்வளவு டேட்டா இருந்தா ஜமாய்க்கலாமே.!இந்த ஊரடங்கில் Vi டபுள் டேட்டா பேக் தான் நமக்கு சரியானது.. இவ்வளவு டேட்டா இருந்தா ஜமாய்க்கலாமே.!

 ரூ. 597 திட்டம் மற்றும் ரூ. 2397 திட்டத்தின் நன்மைகள்

ரூ. 597 திட்டம் மற்றும் ரூ. 2397 திட்டத்தின் நன்மைகள்

அடுத்தபடியாக ரூ. 597 திட்டமானது பயனர்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக ரூ. 2397 திட்டமானது பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் நீண்ட நாள் வேலிடிட்டி உடன் மொத்தமாக 365 ஜிபி டேட்டா நன்மையைத் தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

மலிவு விலையில் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டம் இது தான்

மலிவு விலையில் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டம் இது தான்

உண்மையைச் சொல்லப்போனால், ஜியோவின் இந்த திட்டங்கள் நிச்சயம் அதிக பயனர்களால் ரீசார்ஜ் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனிமேல் தினசரி FUP டேட்டா வரம்பு தீர்ந்துவிடுமோ என்ற கவலையே இல்லாமல், பயனர்களின் சொந்த டேட்டா தேவைக்கு ஏற்றார் போல் இனி டேட்டாவை செலவிட முடியும். மெயின் பிளான் உடன் இந்த 5 பிளான்களில் உங்கள் தேவைக்கு ஏற்றபடி ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொண்டால், டேட்டா வரம்பு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio Introduces 5 New no daily limit Prepaid Mobility Plans For Its Customer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X