அசுர அறிமுகம்: Jio அறிவித்த அடுத்த இலவசம்- ஒரே இரவில் அந்த ஆப்களுக்கு ஆப்பு!

|

ரிலையன்ஸ் ஜியோ முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளும் வகையில் வீடியோ கான்பரசிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தாக்கம் முன்பு பின்பு

கொரோனா தாக்கம் முன்பு பின்பு

வீடியோ கான்பரன்சிங் செயலியின் முக்கியத்துவத்தை கொரோனா தாக்கம் முன்பு பின்பு என பிரிக்கும் வகையில் தற்போதைய காலக்கட்டத்தில் வீடியோகால் என்பது பிரதான தேவையாக இருந்து வருகிறது.

ஆன்லைன் மீட்டிங்கள்

ஆன்லைன் மீட்டிங்கள்

ஆன்லைன் வகுப்புகளுக்கும், நிறுவனங்களுக்குமான ஆன்லைன் மீட்டிங்களுக்கும் வீடியோகால் பிரதான தேவையாக இருந்து வருகிறது. இதையடுத்து ஜூம் செயலி அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதேபோல் ககுள் மீட் செயலியும் ஜூம் மீட்டுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

சீனா செயலியான ஜூம் மீட்

சீனா செயலியான ஜூம் மீட்

இருப்பினும் சீனா செயலியான ஜூம் மீட், பயன்படுத்திய 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தன.

ஜியோ மீட் சேவை

ஜியோ மீட் சேவை

இதற்கு சிறந்த மாற்றாக தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ மீட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்த அறிமுகமானது ஜூம் மீட் மற்றும் கூகுள் மீட் சேவைக்கு இணையான சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ மீட் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில்

ஜியோ மீட் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில்

ஜியோ மீட் சேவையானது வியாழக்கிழமை சிறதளவு பயனர்களுடன் அறிமுகப்படுத்தியது. இந்த ஜியோ மீட் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ தங்களது இந்த பயன்பாட்டை பிற செயலிக்கு நேரடி போட்டியாக களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஜியோமீட் பிரத்யேக சேவை குறித்து பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்கள்

ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்கள்

ஜியோ மீட் சேவையில் வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்களை கொண்டிருக்கிறது. இந்த மீட்டிங்கானது தொலைபேசி எண் அல்லது மெயில் ஐடி மூலம் இணைக்கலாம். இந்த வீடியோ செயலியானது இலவசமாக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது அதோடு இது ஹெச்டி தர வீடியோ கால் சேவையை ஆதரிக்கிறது.

வீடியோ காலிங் சேவை

வீடியோ காலிங் சேவை

ஜியோ மீட் சேவையை பயன்படுத்தி ஒரு நாளுக்கு வரம்பற்ற வீடியோ காலிங் சேவையை பயன்படுத்தலாம். இந்த செயலி ஐந்து சாதனங்கள் வரையிலான மல்டி டிவைஸ் லாக்-இன் ஆதரவை வழங்குகிறது.

இது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்!இது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்!

safe driving mode உள்ளிட்ட அம்சம்

safe driving mode உள்ளிட்ட அம்சம்

ஜியோமீட் இந்திய செயலி என்பதால் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருக்காது என்றே கருதப்படுகிறது. இந்த செயலியில் பிரத்யேகமான safe driving mode உள்ளிட்ட அம்சமும், ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் வழங்கப்படுகிறது. இந்த செயலியானது கண்டிப்பாக இந்தியாவில் பெரும் வரவேற்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance jio introduced jiomeet free video conferencing app

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X