அம்பானி அதிரடி: மறுபடியும் ஒரு தரமான சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.!
ஜியோ நிறுவனம் அன்மையில் பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. மேலும் இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடுவதற்கு முன்பே டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து மற்றொரு காலிங் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பமானது அறிமுகமாகியுள்ளது.

வைஃபை காலிங்
அது என்னவென்றால் வாய்ஸ் ஓவர் வைஃபை ஆகும், இது எளிமையாக அனைவருக்கும் தெரியும்படி கூறவேண்டும் என்றால் வைஃபை காலிங் என்று அழைக்கலாம். குறிப்பாக இந்த வாய்ஸ் ஓவர் வைஃபை என்பது செல்லுலார் இணைப்பு இல்லாத சூழ்நிலைகளில் சிக்கியுள்ள பயனர்களுகக்கு கண்டிப்பாக உதவுக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

வாய்ஸ் ஓவர் வைஃபை
அதாவது மோசமான சூழ்நிலைகளில் சிக்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த வைஃபை இணைப்பு இருந்தால்,அவர்கள் வாய்ஸ் ஓவர் வைஃபை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியும்.

டெலிகாம்டால்க்
குறிப்பாக ஒரு சில டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இந்த VoWiFi தொழில்நுட்பமானது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதன் சில புதிய பிராந்தியங்களில் இந்த vowifi சேவையை சோதிப்பதாக டெலிகாம்டால்க் வலைதளம் வெளிப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா
அன்மையில் டெலிகாம் டால்க் வலைதளத்தின் டிவீட்டர் பயனர் ஒருவரின் கூற்றுப்படி (@jayesh_mutha87)ரிலையன்ஸ்ஜியோவின் vowifi அம்சமானது மகாராஷ்டிரா வட்டத்தில் உள்ள நாசிக் பிராந்தியத்தில் கிடைப்பதாக தெரிகிறது.
அதன்படி இந்த சேவை அணுக கிடைக்கும் ஜியோவின் வாய்ஸ் ஓவர் வைஃபை அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்டுகளை அந்தடிவிட்டர் பயனர் பகிரிந்துள்ளார் என்பது குறப்பிடத்தக்கது. ஆனால் ஜியோவின் இந்த vowifi அம்சமானது தேர்ந்தெடுக்கப்பட்ட செல்போன்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை அறிய முடிகிறது.

உடனே அப்டேட் செய்கிறோம்
அதன்பின்னர் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜியோவின் இந்த வைஃபை காலிங் சேவையானது அதன் ஐயூஸ்சி அழைப்பு நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்படுமா அல்லது டேட்டா பயன்பாட்டை மட்டுமே உட்கொள்ளுமா போன்ற கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இல்லைஇ இதுபற்றி விவரம் தெரிந்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications