Home
News

200 கோடி வெளிநாட்டு கடன் வாங்கிய Jio.. யாரு சாமி நீ? இவ்வளவு பெரிய அமௌன்ட்டை அசால்ட்டா வாங்குற?

அடேங்கப்பா.! என்று வியக்கும் அளவிற்கு, இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் செய்யாத ஒரு காரியத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செய்துள்ளது. முதல் முறையாக 200 கோடி வங்கி கடனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், முதல் முறையாக எந்தவொரு இந்திய நிறுவனமும் வாங்காத அளவிற்கு, 2 பில்லியன் டாலர் பணத்தை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இப்போது கடனாக வெளிநாடுகளில் (Offshore) இருந்து வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாடியோவ்.. இவ்வளவு பணமா? இவ்வளவு பெரிய தொகையை கடனா வாங்கி, ஜியோ என்ன செய்யப்போகிறது? எதற்காக இந்த பணம்? என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

200 கோடி வெளிநாட்டு கடன் வாங்கிய Jio.. யாரு சாமி நீ? அசால்ட்டா வாங்குற

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (Reliance Jio Infocomm), 2 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை திரட்டியுள்ளது. இது உண்மையில் FY24 இல் ஒரு இந்திய நிறுவனம் எடுத்த மிகப்பெரிய கடனாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஃபின்னிஷ் கியர் விற்பனையாளரான நோக்கியாவிடமிருந்து (Nokia) சமீபத்திய 5ஜி கியர் வாங்குவதற்கு இந்த கடன் தொகையைப் பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின் படி, இந்த நிதியின் முன்னணி ஏற்பாட்டாளர் எச்எஸ்பிசி (HSBC) ஆகும். மேலும், அறிக்கையின்படி, ஃபின்வேரா (Finnvera) ஆனது நோக்கியா மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிற உலகளாவிய கடன் வழங்குநர்களுக்கு இதே தொகையின் காப்பீட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது. இது ஜியோவிற்கான ஒட்டுமொத்த நிதிச் செலவுகளைக் குறைக்க உதவுவதோடு, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கடன் வழங்குபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த மாபெரும் தொகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரிலையன்ஸ் ஜியோ 5G SA (ஸ்டாண்ட் அலோன் (standalone) திட்டத்திற்காக பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விலையுயர்ந்த விவகாரம், ஏனெனில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு புதிய நெட்வொர்க் உள்கட்டமைப்பை முழுமையாக அமைக்க வேண்டும். இது 5G NSA (non-standalone) பயன்படுத்துவதில் இல்லை.

Jio தொலைத்தொடர்பு நிறுவனம், எரிக்சன் (Ericsson) மற்றும் நோக்கியாவின் உதவியை இந்த புதிய 5G உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்துகிறது. இதுவரை 7,764 நகரங்கள் மற்றும் கிராமங்களை ஜியோ அதன் 5ஜி (5G) சேவைக்குள் உள்ளடக்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் BNP-Paribas (முன்னணி) ஏற்பாடு செய்த $2 பில்லியன் ஆஃப்ஷோர் கடனை (Jio's 2 billion offshore loan) 5G கியர் வாங்குவதற்கு நிதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

200 கோடி வெளிநாட்டு கடன் வாங்கிய Jio.. யாரு சாமி நீ? அசால்ட்டா வாங்குற

இருப்பினும், இந்தக் கடன் எரிக்சனிடமிருந்து வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஸ்வீடிஷ் கிரெடிட் ஏஜென்சியான (Swedish Credit Agency) இகேஎன் (EKN), Jio-Ericsson 5G ஒப்பந்தத்திற்கு $2.2 பில்லியன் டாலர் காப்பீட்டை (Insurance cover) வழங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் செய்யும் பெரிய அளவிலான முதலீடுகளை நியாயப்படுத்த 5Gயை பணமாக்குவதைப் பார்க்க வேண்டும்.

ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையை சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் (5G network) மூலம் இயங்கும் பிராட்பேண்ட் (Broadband) இணைய சேவை என்று அறிவித்தது. 5G இல் வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு/சேவை இதுவாகும். இது வெற்றி பெறுமா இல்லையா என்பதை காலம் தான் சொல்லும். ஏனெனில் ஏற்கனவே JioFiber வைத்திருக்கும் பெரும்பாலான பயனர்கள் Jio AirFiber ஐ நோக்கி நகர மாட்டார்கள்.

ஏனெனில் அவ்வாறு செய்வதால் எந்த நன்மையும் பயனர்களுக்கு நிச்சயமாக கிடைக்கப்போவதில்லை. மறுபுறம், எதிர்காலத்தில் 5ஜி இன் பயன்பாடு மற்றும் சேவை வெகுவாக வளர்ச்சியடையும் போது, நிச்சயமாக ஜியோவின் திட்டங்கள் நல்ல லாபத்தை தர அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. ஜியோவின் இந்த முயற்சி வெற்றி அடையுமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Infocomm raised $2 billion in offshore loan for deploying 5G SA
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X