Home
News

இரக்கமே இல்லையா.. மீண்டும் சில Jio திட்டங்கள் மீது விலை உயர்வு.. என்னென்ன திட்டங்கள் இனி எவ்வளவு?

Reliance Jio Prepaid Plans Price Hike: ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தி முழுதாக 2 மாதங்கள் கூட ஆகவில்லை (நினைவூட்டும் வண்ணம் புதிய விலைகள் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு). வந்தன அதற்குள் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான இந்நிறுவனம் சில குறிப்பிட்ட ஜியோ திட்டங்களின் விலைகளை மீண்டும் உயர்த்தி உள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இந்த திட்டங்களின் கீழ் இனி என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஜியோ நிறுவனமானது தனது ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்டு (Postpaid) திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் போக்கை இப்போதைக்கு நிறுத்துவது போல் தெரியவில்லை. பெரும்பாலான திட்டங்கள் மீது 25% வரையிலான திடீர் விலை உயர்வை (Price Hike) அறிவித்த கையோடு.. ஜியோ நிறுவனம் தற்போது இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாக்களுடன் (Free Netflix Subscription) வரும் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தி உள்ளது.

மீண்டும் சில Jio திட்டங்கள் மீது விலை உயர்வு.. என்னென்ன திட்டங்கள்?

அதென்ன திட்டங்கள்? மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது - ஜியோவின் ரூ.1,099 மற்றும் ரூ.1,499 ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாக்களுடன் வரும் இவ்விரு திட்டங்களும் தற்போது, முறையே ரூ.1,299 மற்றும் ரூ.1,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதாவது ரூ.1,099 ஆனது ரூ.200 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது, மறுகையில் உள்ள ரூ.1,499 ஆனது ரூ.300 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது.

இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை பொறுத்தவரை, விலை உயர்த்தப்பட்ட ஜியோவின் ரூ.1,299 ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு ஸ்மார்ட்போன் அல்லது ஒரு டேப்லெட்டில் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு டிவைஸ் என்கிற கட்டுப்பாடுகளை கொண்ட நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தவுடன் வரும். நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தாவின் கீழ் நீங்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த தரமான வீடியோ ஸ்ட்ரீமிங் 480பி ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மறுகையில் உள்ள ரூ.1,799 திட்டமானது நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவுடன் வருகிறது. இது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் போன்ற எந்த டிவைஸிலும் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கும். நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவின் கீழ் நீங்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த தரமான வீடியோ ஸ்ட்ரீமிங் 720பி ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இலவச நெட்பிளிக்ஸ் சந்தாக்களுடன் வரும் இந்த இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுமே 84 நாட்களுக்கு (84 Days Validity) செல்லுபடியாகும். அதாவது இந்த திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கான இலவச நெட்பிளிக்ஸ் சந்தாக்களை பெறுவார்கள் என்று அர்த்தம். இதுதவிர்த்து ரூ.1,299 மற்றும் ரூ.1,799 திட்டங்களின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Calls) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற வழக்கமான நன்மைகளும் கிடைக்கும்.

இருப்பினும், இந்த திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள அன்லிமிடெட் 5ஜி ஆபர் ஆனது, உங்கள் பகுதியில் ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும். இந்த ஆபரை அணுக உங்களிடம் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மையை பொறுத்தவரை, விலை உயர்த்தப்பட்ட ரூ.1,299 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். மற்றொரு திட்டமான ரூ.1,799 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினமும் 3ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இரண்டு திட்டங்களும் டெய்லி டேட்டா லிமிட்டை தாண்டிய பிறகு 64கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Increases The Price of 2 Prepaid Plans Comes With Netflix Subscription See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X