Jio சைலன்ட்டாக அமல்படுத்திய விலை உயர்வு: ரூ.150 அதிகரித்த திட்டம்.. நன்மையில் மாற்றம் உள்ளதா?

|

Reliance Jio Tariff Hike: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது சத்தமில்லாமல், மிகக் குறைந்த அளவிலான ஒரு கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், மிகவும் சைலன்ட்டாக தனது ப்ரீபெய்டு திட்டங்களில் ஒன்றின் விலையை ரூ.150 உயர்த்தியுள்ளது. எது, ஒரு திட்டத்திற்கு மட்டும் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளதா? என்று நீங்கள் ஷாக் ஆவது இங்கே தெரிகிறது.

சத்தமில்லாமல் ரூ.150 உயர்த்தப்பட்ட திட்டம்

சத்தமில்லாமல் ரூ.150 உயர்த்தப்பட்ட திட்டம்

ஆம், ரிலையன்ஸ் ஜியோவின் பட்டியலில் இருந்த மிகப் பிரபலமான ஒரு திட்டத்தின் மேல் நிறுவனம் இப்போது ரூ.150 கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தப்பட்ட திட்டத்தை நீங்களும் பயன்படுத்துகிறீர்களா என்பதை மேலும் படித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நாம் இங்குப் பேசும் திட்டம் ரூ.749 என்ற விலையில் ஜியோவிடம் இருந்து இதுவரை கிடைத்து வந்தது. ஆனால், இப்போது ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் அமல்படுத்திய விலை உயர்வுக்குப் பின்னர், பயனர்கள் இதே திட்டத்தை இனி ரூ. 899 என்ற விலையில் பெறுவார்கள்.

ரூ.749 திட்டத்தின் புதிய விலை என்ன தெரியுமா?

ரூ.749 திட்டத்தின் புதிய விலை என்ன தெரியுமா?

தெரியாதவர்களுக்கு இது நிறுவனத்திடமிருந்து நீண்ட கால விருப்பத்தை விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டம். திட்டத்தின் திட்டமாகும். சரி, இப்போது இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் மற்றும் பலன்கள் பயன்படுத்தக் கிடைக்கிறது என்று பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.749 திட்டம் இப்போது விலை அதிகரிப்பிற்குப் பிறகு ரூ.899 விலைக்கு வருகிறது. சரி, விலை உயர்த்தப்பட்டால் அதன் நன்மைகளிலும் மாற்றம் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால், நிறுவனம் என்ன செய்துள்ளது தெரியுமா?

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

150 ரூபாய் உயர்வுக்குப் பிறகு நன்மையில் மாற்றம் உள்ளதா?

150 ரூபாய் உயர்வுக்குப் பிறகு நன்மையில் மாற்றம் உள்ளதா?

ரிலையன்ஸ் ஜியோ பொதுவாகக் கட்டண உயர்வைப் பற்றி நினைக்கும் போது நினைவுக்கு வரும் கடைசி டெலிகாம் ஆபரேட்டராகும். இந்நிறுவனம் நாட்டிலேயே மிகவும் மலிவு விலை கட்டணத்துடன் கூடுதல் நன்மைகளை வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. ஆனால், ஜியோ சத்தமே இல்லாமல் அதன் ஜியோ ரூ.749 திட்டத்தின் விலையை ரூ.899 ஆக உயர்த்திய பிறகும், நிறுவனம் அதன் பயனர்களுக்கான நம்பிக்கையை முழுமையாக வழங்கவில்லை. காரணம், 150 ரூபாய் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த் திட்டத்தின் பலன்கள் அப்படியே உள்ளன, விலை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 திட்டம்

இந்த புதிய விலை புதுப்பிப்பு ஏற்கனவே ஜியோவின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது. இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு வழங்கும் மொத்த டேட்டா 24ஜிபி ஆகும். பயனர்கள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2GB அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள். அதன் வேகம் 64 Kbps ஆக குறைகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 336 நாட்கள், மேலும் பயனர்கள் 12 சுழற்சிகளில் (2ஜிபி x 12 சுழற்சிகள் ஒவ்வொன்றும் 28 நாட்கள்) டேட்டாவைப் பெறுகிறார்கள்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

ஜியோவின் ரூ.899 திட்ட நன்மைகள் என்ன?

ஜியோவின் ரூ.899 திட்ட நன்மைகள் என்ன?

ஒவ்வொரு 28 நாட்களின் அதே 12 சுழற்சிகளில், ஜியோபோன் பயனர்களும் 50 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். ஆனால் குரல் அழைப்புக்கு எந்த தடையும் இல்லை. இது தவிர, ஜியோ இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்கு JioCinema, JioSecurity, JioCloud மற்றும் JioTV ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. ரூ.749 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோபோன் பயனர்கள் இப்போது அதற்கு ரூ.899 செலுத்த வேண்டும். திட்டத்துடன் வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படவில்லை. ஜியோவின் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களின் மேல் எந்த விலை உயர்வும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Reliance Jio Implements Silent Tariff Hike On Rs 749 Plan With No Change Of Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X