Home
News

ஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ! மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்கிவந்தது. இந்த சேவைக்காகவே ஜியோ நெட்வொர்க்கின் கீழ் சுமார் 355 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

6ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய திட்டங்கள்

6ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய திட்டங்கள்

ஆனால் அண்மையில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தாங்கள் வழங்கி வந்த சேவைக்கான விலையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றே. ஜியோ நிறுவனம் தனது புதிய திட்ட விலை மாற்றங்களைக் கடந்த 6ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

முன்பை விட 40% சதவீதம் அதிகம்

முன்பை விட 40% சதவீதம் அதிகம்

இந்த புதிய விலை மாற்றம், முன்பு இருந்த விலையை விட சுமார் 40% சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களின் புதிய திட்ட விபரங்களை வெளியிட்டது, குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்பு இந்நிறுவனம் இரண்டும் மற்ற நெட்வொர்க்கிற்கான அழைப்பு சேவையை முற்றிலும் இலவசமாக்கியது.

மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஆனலும் ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைக்கான அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தற்பொழுது ஜியோ நிறுவனம் மீண்டும் தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம்

1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம்

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து புதிய திட்டங்களில் குறைந்த டேட்டா சேவையே தினமும் 1.5ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது. அதைவிடக் குறைவான டேட்டா சேவையைத் தேவைப்படும் பயனர்களுக்கு என்று தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும்படி இந்த ரூ.149 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசம் மற்றும் 300 FUP லிமிட் பொருந்திய மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. FUP லிமிட் முடிந்த பின், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம், ஜீடோவின் மற்ற திட்டங்களைப் போல் இல்லாமல் சற்று வேறுபாட்டுடன் இருக்கிறது, மற்ற திட்டங்களில் கிடைக்கும் தினசரி டேட்டா பலன் இந்த ரூ.98 திட்டத்தில் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக அதன் வேலிடிட்டி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒட்டுமொத்தமாக டேட்டா மற்றும் எஸ்.எஸ்.எஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்

ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான IUC டாக் டைம் திட்டங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் மற்ற திட்டத்தை போல் 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Hits Back at Airtel and Vodafone Idea By Introducing Rs.149, Rs.98 Prepaid Plans Again : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X