செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்க ரெடியாகும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஜியோ ப்ளாட்ஃபார்ம் நிறுவனமும், எஸ்.ஈ.எஸ் எனப்படும் செயற்கைக்கோள் மூலம்
சேவைகளை வழங்கும் நிறுவனமும் ஒன்றினைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது. குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் இணையவசதி சேவையை வழங்க இந்த புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக இந்த நிறுவனத்தின் பங்குகளில் ஜியோ நிறுவனம் ஆனது 51 சதவீத பங்குகளையும், எஸ்.ஈ.எஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த புதிய நிறுவனம், தொலைதொடர்பு சேவைக்காக விண்வெளியில் இடைப்பட்ட பூமியின் சுற்றுவட்டப்பாதையையும், பூமிக்கு இணையான சுற்றுவட்டப்பாதையையும் பயன்படுத்தவுள்ளது.

குறிப்பாக இதன்மூலம் நிறுவனங்களுக்கும், மொபைல்போன்களுக்கு, இந்தியா மற்றும் சுற்றியுள்ள அண்டைநாடுகள் முழுவதுமுள்ள நுகர்வோர்களுக்கு இணையசேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இணைநிறுவனம் எஸ்.இ.எஸ்செயற்கைக்கோள் டேட்டாவை மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளை இந்தியாவுக்கு வழங்க ஒரு கருவியாக இருக்கும்
என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோபோன் 5ஜி, ஜியோபுக் லேப்டாப் என பல சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்து. இந்நிலையில் ஜியோபுக் லேப்டாப் சாதனத்தின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. 91mobiles தகவலின்படி, இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் ஆனது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக சியோமி, டெல், லெனோவா நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஜியோபுக் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபுக் லேப்டாப் ஆனது மீடியாடெக் எம்டி8788 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 32ஜிபி ஈஎம்எம்சி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet,JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ்போன்ற பல சிறப்பான ஆதரவுகளுடன் இந்த புதிய லேப்டாப் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் மாடலில் வெப் கேமரா வசதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த லேப்டாப் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
News Source: business-standard.com


Click it and Unblock the Notifications