சத்தமின்றி கூடுதல் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.! எந்த திட்டத்தில் தெரியுமா?
சில வாரங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பிறகு தற்போது தான் ஜியோ நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.2345 திட்டத்தில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த ரூ.2345 திட்டத்தில் 29 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்.

ஜியோ ரூ.2354 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ பயனர்கள் ரூ.2354 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி-க்கு பதிலாக 365 நாட்கள் வேலிடிட்டி-ஐபெறமுடியும் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் வேலிடிட்டி நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறேவேண்டும்.

ஜியோவின் ரூ.2345 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறுபுதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தை தான் அறிமுகம்
செய்தது ஏர்டெல். இந்த புதிய திட்டம் கிட்டத்தட்ட அதிக நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை இந்த புதிய திட்டத்தின்மூலம் பெற முடியும்.

ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான ஒரு மாதத்திற்கான இலவச சந்தா,ஷா அகாடமி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் ஏர்டெல் நிறுவனம்
வழங்கும் டேட்டா வவுச்சர்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ. 58 டேட்டா வவுச்சர்
ஏர்டெல் வழங்கும் முதல் டேட்டா வவுச்சர் ரூ. 58 விலை திட்டமாகும். இது ரூ. 58 விலையில் அதன் பயனர்களுக்கு மொத்தமாக 3ஜிபி இணையத் தரவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பயனரால் பயன்பாட்டில் உள்ள பிற பேக்கிற்குச் சமம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, ஆக்டிவ் பண்டில் மற்றும் ஸ்மார்ட் பேக் பயனர்களுக்கு இந்தத் திட்டம்கிடைக்கிறது. 3ஜிபி டேட்டா முடிந்ததும், பயனர்களிடமிருந்து ஒரு எம்பிக்கும் 50 பைசா என்று வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 98 டேட்டா வவுச்சர்
ஏர்டெல்லின் பட்டியலில் உள்ள அடுத்த 4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.98 திட்டமாகும். இந்த திட்டம் குறிப்பிடப்பட்ட விலையில் மொத்தம் 5ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது டேட்டா வவுச்சராக இருப்பதால், இந்த திட்டத்தின் செல்லுபடியும் ஏற்கனவே இருக்கும் திட்டத்தைப் போலவே இருக்கும். இது தவிர, ரூ.98 டேட்டா வவுச்சர் Wynk Music Premium அணுகலுடன் வருகிறது. இது நிறுவனத்தின் சொந்த இசைப் பயன்பாடாகும். இது இசை, நேரடி இசை நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்கள் மற்றும் பலவற்றை
வழங்குகிறது.5GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு பயனர்களுக்கு 50p/MB கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ. 108 டேட்டா வவுச்சர்
பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.108 வவுச்சர் திட்டமாகும். இது ரூ.108 விலையில் 6ஜிபி இணையத் தரவை வழங்குகிறது. இது பயனரால் தற்போதுள்ள திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒத்துப்போகிறது. ஆக்டிவ் பண்டில் பேக் மற்றும் ஸ்மார்ட் பேக் பயனர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இது தவிரப் பயனர்கள் OTT இயங்குதளமான Amazon Prime வீடியோ மொபைல் பதிப்பையும் 30 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். இது இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 6ஜிபி டேட்டா முடிந்த பிறகு, பயனர்களுக்கு 50p/MB கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ. 118 டேட்டா வவுச்சர்
மேலே உள்ள திட்டம் பிடித்தவர்களின் உன்னிப்பான கவனத்திற்கு, நீங்கள் ரூ.108 டேட்டா வவுச்சரை தேர்வு செய்யும் நேரத்தில் கூடுதலாக வெறும் ரூ.10 செலுத்துவதன் மூலம், ரூ.118 விலையில் உங்களுக்கு இரட்டிப்பு டேட்டா நன்மை கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள். மேலே உள்ள திட்டத்துடன் ஒப்பிடும் போது, ரூ. 118 திட்டத்துடன் இரட்டிப்பு டேட்டாவை இந்த 4G டேட்டா வவுச்சர் வழங்குகிறது. ரூ. 118 விலையில் ஏர்டெல் 12ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் மேலே உள்ள விங்க்
மியூசிக் மற்றும்அமேசான் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. வழங்கப்படும்
12ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு பயனர்களுக்கு 50p/MB என்ற கட்டணம் விதிக்கப்படும்.

ரூ.148 4ஜி டேட்டா வவுச்சர்
டெல்கோ வழங்கும் பட்டியலில் அடுத்தது ரூ.148 4ஜி டேட்டா வவுச்சர் திட்டமாகும். இத்திட்டம் 148 ரூபாய்க்கு, ஏர்டெல் பயனர்களுக்கு மொத்தம் 15 ஜிபி இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பயனரால் ஏற்கனவே உள்ள மற்ற பேக்கின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒற்றுமையானது.


Click it and Unblock the Notifications