பிரபல திட்டத்தின் விலையை உயர்த்திய ஜியோ.! வாடிக்கையாளர்கள் ஷாக்!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள வகையில் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் அதன் பிரபல திட்டங்களின் ஒன்றான ரூ.222 டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி பேக்கின் விலையை சற்று அதிகரித்துள்ளது.

 இது ரூ.33 ஆக உயர்த்தப்படுகிறது

இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.222 பேக் உள்ளிட்ட தொடர்ச்சியான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பேக்குகளை அறிமுகம் செய்தது. ஆனால் மற்ற திட்டங்களின் மீது எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், ஜியோ அதன் ரூ.222 பேக்கின் விலையை மட்டும் ரூ.255 ஆக உயரத்தியுள்ளது. அதாவது இது ரூ.33 ஆக உயர்த்தப்படுகிறது.

ஜியோ ஆப்பிற்கு செல்லும்

மேலும் மைஜியோ ஆப்பிற்கு செல்லும் பயனர்களுக்கு பிரத்தியேக லிமிடெட் பரீயட் மேம்படுத்தல் சலுகையின் (Exclusive Limited Period Upgrade Offer) கீழ் இந்த விலை மாற்றம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் Vs ஜியோ Vs விஐ: ரூ.599, ரூ.598 விலையில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது?

 விஐபி சந்தாவின்

ஜியோ நிறுவனத்தின் இந்த ரூ.255 பேக் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் நன்மையையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்துடன் அனுப்பப்படும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மை ஒரு வருட காலம் செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் குரல் நன்மைகள் எதுவும் இல்லை.

சொல்ல வேண்டும் என்றால், இந்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த திட்டம் உண்மையில் ஒரு ஆட்-ஆன் திட்டமாகும் மற்றும் இது உங்களின் அடிப்படை வாய்ஸ் கால் திட்டத்தின் அதே செல்லுபடியைப் பெறும். அதாவது ரூ.255 திட்டம் முழுமையான செல்லுபடியாக்கலுடன் வரவில்லை

என்பதால், இதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் அடிப்படை குரல் அழைப்பு திட்டத்துடன் ஒற்றுப்போகும். எனவே இந்த திட்டத்தை பயன்படுத்த, பயனர் ஏற்கனவே ஆக்டிவ் ஆக ஒரு குரல் அழைப்பு பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இணைய வேகம் 64

இந்த திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை 15 ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவுடன் அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட 15 ஜிபி டேட்டாவை நீங்கள் முடித்தவுடன், இணைய வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

குறிப்பிட்டபடி, ரிலையன்ஸ் ஜியோ

முன்பு குறிப்பிட்டபடி, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் மற்ற டிஸ்னி + ஹாட்ஸ்டார் பேக்குகளில் எந்த மாற்றமும் கிடையாது. புதிய ரூ.255 திட்டத்தை போலவே டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மையுடன் வரும் மற்றொரு டேட்டா திட்டமும் உள்ளது. அதுவும் பயனர்களுக்கு எந்த குரல் அழைப்பு நனமையையும் வழங்காது. அது ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 56நாட்கள் ஆகும்.

ஜியோவின் ரூ.499 திட்டமானது தின

அதன்படி ஜியோவின் ரூ.499 திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் பயனர்கள் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான பாராட்டு சந்தாவைப் பெறுவார்கள். உடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் நன்மையும் வழங்கப்படும்.

ஆட்-ஆன் திட்டங்களின் மீது

உங்களுக்கு இந்த ஆட்-ஆன் திட்டங்களின் மீது விருப்பம் இல்லை என்றால், மாறாக வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மை ஆகியவற்றுடன் கூடிய அடிப்படை திட்டத்தை நீங்கள் விரும்பினால், நீங்கள் ஜியோ ரூ.401, ரூ.598, ரூ.777 மற்றும் ரூ.2,599 போன்ற திட்டங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio has hiked the price of Rs 222 Disney + Hotstar VIP Pack : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X