Subscribe to Gizbot

கூகுளுடன் இரகசிய கூட்டணி : அம்பானியின் அடுத்த திட்டமென்ன.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் 100 மில்லியன் சந்தாதாரர்கள் என்ற மைல்கல்லை எட்டியது என்பதை நாம் அறிவோம்/ அதற்கு மிக முக்கியமான காரணமாக ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான குரல் மற்றும் தரவு சேவைகள் தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்நிறுவனம் அதே "மலிவு விலை" என்ற நிச்சயமான வெற்றியை வழங்கும் பாணியை பின்பற்றி மேலும் பல துறைகளுக்குள் புரட்சியை உண்டாக்க திட்டமிட்டுள்ளது.

அந்த வரிசையில் முதலில் வெளியாவது ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவையா அல்லது மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனா.?? என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் முதலில் மிகவும் மலிவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கருவிகள் தான் வெளியாகும் என்ற தகவலோடு, கூகுள் நிறுவனத்துடன் ஜியோ கூட்டணி வைப்பதையும் சேர்த்தே வெளிப்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உறுதி

உறுதி

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கிடைத்த வெற்றியைப்போலவே ஜியோ நிறுவனதிற்கு 4ஜி மொபைல் பிரிவிலும் வெற்றி கிடைக்கும் என்பதை எது உறுதி செய்கிறதோ இல்லையோ கூகுள் நிறுவனம் உறுதி செய்யும்.

பணி

பணி

வெளியான தகவலின்படி ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர் அடிப்படைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒரு 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி தொடங்க திட்டமிட்டுளளதாம்.

பிரத்தியேகமாக

பிரத்தியேகமாக

வெளியான அறிக்கையின் படி, இரண்டு நிறுவனங்களும் ரகசியமாக ஒரு மலிவு ஸ்மார்ட்போன் சார்ந்த தயாராப்பில் ஒன்றாக வேலை செய்ய திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக ஜியோ 4ஜி நெட்வொர்க்கிற்காக பணியாற்றும் என்றும் குறிப்பிடுகிறது.

தொழில் ஆதாரம்

தொழில் ஆதாரம்

மேலும் சில தொழில் ஆதாரங்களை மேற்கோள் காட்டும் அறிக்கையானது, ஜியோவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டணி

கூட்டணி

மேலும் இந்த கூட்டணி மூலம் ஜியோ பயன்பாடுகள் இன்னும் இறுக்கமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தோடு இணைந்து ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த அனுமதிக்கும். "இத்தகைய ஒரு ஸ்மார்ட்போன் ஆனது தரவு பயன்பாடு குறைப்பு மற்றும் பிணையத்தில் சிறந்த திரைப்படம் மற்றும் இசை அனுபவத்தை வழங்க உதவும்.

மலிவான 4ஜி

மலிவான 4ஜி

இந்த கூட்டணி மூலம் ஒட்டுமொத்த ஜியோ நெட்வொர்க்கின் தரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் சுவாரசியமான தகவலாக ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ ரூ.1500/-க்கும் குறைவான விலையில் மலிவான 4ஜி சாதனங்கள் விற்கும் திட்டத்தை அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பெருமளவு

பெருமளவு

இப்போது இந்த கூட்டணி சார்ந்த அறிக்கை வெளியாகியுள்ளதின் மூலம் ஜியோவின் மலிவான 4ஜி சாதனங்கள் விற்கும் திட்டத்தின் மூலம் ஜியோவின் நெட்வொர்க் சேவை பெருமளவு விரிவடையும் என்பது உறுதி.

ஆண்ட்ராய்டு ஒன்

ஆண்ட்ராய்டு ஒன்

மேலும் இதன் மூலம் அநேகமாக மீண்டும் அவ்வளவு பிரபலமான ஆண்ட்ராய்டு திட்டமான ஆண்ட்ராய்டு ஒன் திட்டமானது மீண்டும் இந்தியாவில் நுழையலாம், உடன் மாபெரும் தேடல் பொறி நிறுவனமான கூகுளுக்கு பெரிய அளவிலான புதிய பயனர்கள் வரவும் அணுகப்பெறலாம்.

திட்டம்

திட்டம்

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் உடன் கூட்டுசேர்ந்து 2014-ஆம் ஆண்டு கூகுள் அதன் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை தொடங்கியது. எனினும், இந்த திட்டம் நன்றாக செல்லவில்லை என்ற காரணத்தால் இறுதியில் இத்திட்டத்தை கூகுள் கைவிட வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி சேவை

டிவி சேவை

4ஜி மொபைல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள், ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டில் தொடங்கப்படும் வண்ணம் ஜியோ ஸ்மார்ட் டிவி சேவைகள் சார்ந்த ஒரு மென்பொருள் வேலையிலும் ஒன்றாக ஈடுபட்டு வருகிறது என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள அலறும் ஏர்டெல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance Jio, Google working together to launch an affordable 4G smartphone in India. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot