Home
News

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் : எது சிறந்தது.??

இந்தியாவில் இண்டர்நெட் சேவை வழங்கும் மூன்று நிறுவனங்களில் சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan

4ஜி சேவைகளை அறிமுகம் செய்து டெலிகாம் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடிக்குத் தயாராகி விட்டது. ஜியோ ஜிகாஃபைபர் மூலம் பிராட்பேன்ட் சேவைகளை வழங்கும் துவக்க காலப் பணிகளில் ஜியோ ஈடுபட்டு வருகிறது.

புதிய சேவைகளின் கட்டணங்கள் இணையத்தில் கசிந்து விட்டன. இவை மற்ற நிறுவன சேவைகளை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது.

கடந்த வாரம் ஏர்டெல் நிறுவனமும் தனது வி-ஃபைபர் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் வெளியாகியன. ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது.

மறுபுறம் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் சந்தையில் மெல்ல கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. இங்கு மூன்று நிறுவனங்களை ஒப்பிட்டு இவற்றில் சிறந்த சேவை எது என்பதைப் பார்ப்போமா.?

சூப்பர்-ஃபாஸ்ட் இண்டர்நெட் தொழில்நுட்பம்

சூப்பர்-ஃபாஸ்ட் இண்டர்நெட் தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவை மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் வி-ஃபைபர் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை கிட்டத்தட்ட நொடிக்கு 100 ஜிபி என்ற வேகத்தில் இணையச் சேவை வழங்கும் எனக் கூறப்படுகின்றது.

மலிவு விலை திட்டங்கள்

மலிவு விலை திட்டங்கள்

ரகசியமாகக் கசிந்திருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டங்கள் ரூ.500/- முதல் துவங்குகின்றது. இந்தச் சேவையில் திட்டங்களின் விலை ரூ.5000/- வரை இருக்கிறது. டேட்டாவை பொருத்த வரை 50 ஜிபி முதல் 1000 ஜிபி வரை இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் குறைந்த விலை

பிஎஸ்என்எல் குறைந்த விலை

பிராட்பேன்ட் சேவைகளின் தற்போதைய விலையைப் பொருத்த வரை பிஎஸ்என்எல் மிகக் குறைந்த விலையை வழங்குகிறது. பிஎஸ்என்எல் சேவைகள் BB249, BBL 1199 எனத் துவங்குவதோடு சீரான இணைய வேகத்தையும் வழங்குகிறது.

அறிமுகச் சலுகை

அறிமுகச் சலுகை

ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகச் சலுகை வெற்றியைத் தொடர்ந்து அந்நிறுவனம் இது போன்ற சலுகையினை ஜியோ ஜிகாஃபைபர் சேவைகளுக்கும் வழங்கும் எனக் கூறப்படுகிறது. ஏர்டெல் வி-ஃபைபர் தொழில்நுட்ப சேவைகளைப் பொருத்த வரை ஒரு மாத காலத்திற்கு இலவச சேவைகளை வழங்க இருப்பதாகக் கூறப்சடுகின்றது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் விஃபைபர் தொழில்நுட்ப சேவைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் நோக்கில் பிஎஸ்என்எல் தனது பிராட்பேன்ட் சேவைகளைப் புதிய வகை ஃபைபர் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தி வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio GigaFiber vs Airtel V-Fiber vs BSNL Broadband
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X