ஜியோ ஜிகா பைபர் பிரிவியூ சலுகை அறிவிப்பு: 1100 ஜிபி டேட்டா பெற முடியும்.!
ஜியோ ஜிகா பைபர் என்று தற்போது இணையதள சேவைக் வழங்கவும் தற்போது புதிய நிறுவனம் துவங்கியுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது ஜியோ ஜிகா பைபருக்கு முதற்கட்டமாக சலுகைகளை
தற்போது ஜியோ நிறுவனம் இந்திய தொலைபேசி சந்தையில் முன்னணியில் உள்ளது. ஜியோ நிறுவனத்தின் பல்வேறு அதிரடி சலுகையால், இந்திய வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது. ஜியோ நிறுவனம் மேலும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஜியோ ஜிகா பைபர் என்று தற்போது இணையதள சேவைக்காக புதிய நிறுவனம் துவங்கியுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது ஜியோ ஜிகா பைபருக்கு முதற்கட்டமாக சலுகைகளை அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

ஜியோ ஜிகா பைபர் முன்பதிவு:
ஜியோ ஜிகா பைபர் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஜியோ ஜிகா பைபர் பிரிவியூ சலுகையின் கீழ் முதல் மூன்று மாதத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் ரூ.4500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதத்திற்கு எந்த விட கட்டணம் இல்லாமல் கூடுதல் சலுகைகளை பெற முடியும்.

6 மாத சலுகையுமா? :
வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. முன்பதிவு பெறும் நகரத்தில் சேவை முதலில் துவங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோவுக்கு வழங்கப்பட்ட 6 மாத சலுகையையை போல ஜியோ பைபர் சலுகையில் இலவச பிரிவியூ வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

40 ஜிபி டேட்டா:
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டார்-அப் அறிவிக்கப்பட்டலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்ககள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தாலம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப்- சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

1100 ஜிபி டேட்டா :
முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும். இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெறமுடியும் என்று பிரிவியூ சார்ந்த விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








