அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர்-இலவசங்கள்.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர். தற்போது சோதனை முறையில் இயங்கி வருகின்றது. இதில் ஏராளமான இலவச சேவைகள் வழங்கப்படுகின்றது. ஜியோ ஜிகா பைபரில் இலவசமாக இந்தியா முழுக்க அளவில்லா வாய்ஸ
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர். தற்போது சோதனை முறையில் இயங்கி வருகின்றது.இதில் ஏராளமான இலவச சேவைகள் வழங்கப்படுகின்றது.

ஜியோ ஜிகா பைபரில் இலவசமாக இந்தியா முழுக்க அளவில்லா வாய்ஸ் கால்கள், 600 டிவி சேனல்கள், டேட்டா, இலவச ஆப்கள் உள்ளிட்டவைகளை கிடைக்கின்றது.
மாத கட்டணமாக ரூ.600 தான் வசூலிக்கப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. ட்ரிபிள் பிளான் திட்டமும் நடைமுறையில் இருக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர்:
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் இந்தியாவில் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது டெலிகாம் துறையில் முன்னணி இடத்தை தனக்கென்று பிடித்து விட்டது.
இது வழங்கியா பல்வேறு இலவச சேவைகளால் இந்தியாவில் நெ.1 இடத்தை பிடித்துள்ளது ஜியோ. தொடர்ச்சியாக கேபிள் வழியாக ஜியோ ஜிகா பைபரில் கேபிள் வழியாக வாய்ஸ் கால், டேட்டா, ஹோம் டிவி என மூன்றையும் வழங்குகிறது ஜியோ ஜிகா பைபர்.

கிடைக்கும் சேவைகள்:
கேபிள் வழியாக ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் ஹோம் டிவி, இணையம், அளவில்லா வாய்ஸ் கால்கள், இலவச ஆப் உள்ளிட்டவைளை வழங்குகின்றது.
மலிவான விலையில் ஏரளமான சலுகைகளை அளவில்லாமல் வழங்க ஜியோ ஜிகா பைபர் இருக்கின்றது.

வைப்பு தொகை :
நாம் ரிலையன்ஸின் ஜியோ ஜிகா பைபர் பெற வேண்டும் என்றால் நாம் வைப்பு தொகையாக ரூ.4500 செலுத்த வேண்டும். இதை நாம் செலுத்தினால் நாம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில், இணையம், ஹோம் டிவி உள்ளிட்டகளை பயன்படுத்த முடியும்.
அடுத்தபடியாக விலை வைப்பு தொகை ரூ.2500 செலுத்தினால், நாம் அந்த சேவைகளை 50 எம்பிபிஎஸ் வேகத்தில் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹோம் டிவி சேவை:
நாம் ஜியோ ஜிகா பைபரில் நாம் ஹோம் டிவியை இலவசமாக அனுபவிக்க முடியும். இதற்காக ரிலையன்ஸ் ஜியோ 600 ஹோம் டிவிகளை இலவசமாக வழங்குகின்றது. இதற்காக 4 கே ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களையும் வழங்குகின்றது.

கட்டணம் ரூ.600:
நாம் இந்தியா முழுக்கவும் அளவில்லா வாய்ஸ்கால்களையும், இணையத்தையும், 600 ஹோம் டிவிகளையும், இலவச ஆப்களையும் நாம் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வர்த்த ரீதியான சேவை:
தற்போது, ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் வர்த்த ரீதியான சேவை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஜிகா பைபரில் முழுமையாக கிடைக்கும் சலுகைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications