அசத்தலான ஜியோ பிராட்பேண்ட் அறிமுகம்: விலை உள்ளே.!

இந்த சேவைக்கான முன்பதிவு ஆகஸ்ட் 15-முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும்.

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் மூலம் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகளை இந்தியாவில் 15 முதல் 20 நகரங்களில் துவங்க திட்டமிட்டுள்ளது.

அசத்தலான ஜியோ பிராட்பேண்ட் அறிமுகம்: விலை உள்ளே.!

குறிப்பாக ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜகாஃபைபர் பிராட்பேன்ட் பொறுத்தவரை 100ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையுடன் இன்டர்நெட் டிவி,வீடியோ கால் வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

துவகத்தில் இலவசமாக வழங்கப்படும்.!

துவகத்தில் இலவசமாக வழங்கப்படும்.!

ரிலையன்ஸ் வழங்கும் இந்த புதிய ஜிகாஃபைபர் சேவை துவகத்தில் இலவசமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு ஃபைபர்
சார்ந்த இணைப்புகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டி கட்டாயத்தில் பல சாவல்கள் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

5 கோடி வீடுகளுக்கு.!

5 கோடி வீடுகளுக்கு.!

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த ஜிகாஃபைபர் சேவைகளை அறிவித்துது ரிலையன்ஸ் நிறுவனம், மேலும் 1100
நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு முதலில் இந்த பிராட்பேன்ட் சேவைகள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முன்பதிவு எப்போது?

முன்பதிவு எப்போது?

இந்த சேவைக்கான முன்பதிவு ஆகஸ்ட் 15-முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு
முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இப்போது இருக்கும் பிராட்பேன்ட் மற்றும்
செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில்
தகவல் வெளிவந்துள்ளது.

 ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் சென்னையில் மாதம் 100ஜிபி டேட்டாவினை அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோவின் சேவைகள் அறிமுகம் செய்ததும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது. ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349-விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிராட்பேண்ட் சலுகையை
தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 20சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 அன்லிமிட்டெட் டேட்டா சலுகை:

அன்லிமிட்டெட் டேட்டா சலுகை:

தற்சமயம் வரை ஏர்டெல் நிறுவனம் ஐதராபாத்தில் அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. மேலும் கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்கும் பயனர்களுக்கு 20சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
reliance-jio-gigafiber-broadband-launch-cities-price-plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X