விட்டதை பிடித்த ஜியோ- இப்போ அதிவேக பதிவிறக்கம் ரிலையன்ஸ் ஜியோ தான்: ஆனா வளர்ச்சி அவுங்க தான்!

|

ரிலையன்ஸ் ஜியோவிந் சராசரி பதிவிறக்க வேகம் பிப்ரவரி 2022 இல் 20.60 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து மார்ச் 2022 இல் 21.21 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த மாதத்தைவிட 2.5% அதிகரித்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டு மார்ச் மாதத்தின் சராசரி பதிவிறக்க வேகம் குறித்து பார்க்கையில், விஐ ஆனது 2.7 சதவீதமும் ஏர்டெல் 8.6 சதவீதமும் அதிகரித்துள்ளன.

மிக விரைவான சராசரி 4ஜி பதிவிறக்க வேகம்

மிக விரைவான சராசரி 4ஜி பதிவிறக்க வேகம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின்படி, மார்ச் 2022 இல் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ மிக விரைவான சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை கொண்டிருக்கிறது. பதிவேற்ற வேகத்தில் வோடபோன் ஐடியா (விஐ) முன்னணியில் இருக்கிறது. பிடிஐ அறிக்கையின்படி, டிராய் தரவுகளில் விஐ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் கடந்த மாதத்தைவிட அதிக பதிவிறக்க வேகத்தை பெற்றிருக்கிறது. வோடபோன் ஐடியா (விஐ) ஆனது 17.9 எம்பிபிஎஸ் வேகத்தையும் ஏர்டெல் 13.7 எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்தை பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதேபோல் ஜியோ சராசரியாக 21.1 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை வழங்கி இருக்கிறது. விஐ நிறுவனமும் ஜியோவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வேகத் தரவு அடிப்படையில் ஏர்டெல் வேகம் கணிசமாக குறைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி பதிவிறக்க வேகம்

ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி பதிவிறக்க வேகம்

ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சராசரி பதிவிறக்க வேகம் பிப்ரவரி 2022 இல் 20.60 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து மார்ச் 2022 இல் 21.21 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் 2022 இல் சராசரி பதிவிறக்க வேகம் விஐ 2.7 சதவீதமும் ஏர்டெல் 8.6 சதவீதமும் அதிகரித்துள்ளன. சராசரி பதிவேற்ற வேகம் என்று பார்க்கும் போது விஐ முன்னிலையில் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (விஐ) மார்ச் 2022 இல் சராசரியாக 8.2 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தை பெற்றிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் குறித்து பார்க்கையில், ரிலையன்ஸ் ஜியோ ஆனது 7.3 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், பாரதி ஏர்டெல் ஆனது 6.1 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், பிஎஸ்என்எல் ஆனது 5.1 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றிருக்கிறது. இந்தியா முழுவதும் 4ஜி வேகம் கிடைக்காவிட்டாலும் பிஎஸ்என்எல் சராசரி பதிவேற்ற வேகம் என்பது அவ்வளவு மோசமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயலற்ற பயனர்களை நீக்கும் பணி

செயலற்ற பயனர்களை நீக்கும் பணி

2022 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ இணைத்துள்ளது. ஜியோ மொத்தமாக 0.30 மில்லியன் அதாவது 3,08,340 புதிய வயர்லைன் சந்தாதாரர்களை இணைத்தது. அதேபோல் பாரதி ஏர்டெல் 0.09 மில்லியன் அதாவது 94010, பிஎஸ்என்எல் 0.03 மில்லியன் அதாவது 32098 எனவும் குவாட்ரன்ட் 0.01 மில்லியன் அதாவது 16,749 புதிய வயர்லைன் பயனர்களை இணைத்துள்ளது. மேலும் கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ தனது மொத்த சந்தாதாரர் தளத்தில் இருந்து செயலற்ற பயனர்களை தீவிரமாக நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது டிராய் வெளியிட்ட மாதாந்திர செயல்திறன் அறிக்கையின்படி, ஜனவரி 2022-ல் ஜியோ 9.3 மில்லியன் அதாவது 93,32,583 பயனர்களை இழந்துள்ளது. ஜியோ மட்டுமின்றி வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. வோடபோன் ஐடியா (விஐ) 0.38 மில்லியன் அதாவது 3,89,082 சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் 0.37 மில்லியன் அதாவது 3,77,520 சந்தாதாரர்களையும் இழந்துள்ளனர். அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிலும் பாரதி ஏர்டெல் மட்டுமே வாடிக்கையாளர்களை இணைக்கும் நிறுவனமாக இருக்கிறது. அதாவது ஏர்டெல் ஜனவரி 2022-ல் மொத்தம் 0.71 மில்லியன் அதாவது 7,14,199 பயனர்களை இணைத்துள்ளது.
அதேபோல் டிராய் தரவுகளின்படி, ஜனவரி 2022-ல் மொத்தம் 9.53 மில்லியன் என்என்பி கோரிக்கைகள் செய்யப்பட்டதாக டிராய் தரவு தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்கள்

அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்கள்

டிராய் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான வயர்லைன் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ இணைத்திருக்கிறது. ஜியோ மொத்தம் 3,08,340 அதாவது 0.30 மில்லியன் புதிய வயர்லைன் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. அதேபோல் பாரதி ஏர்டெல் 0.09 மில்லியன் அதாவது 94010, பிஎஸ்என்எல் 0.03 மில்லியன் அதாவது 32098 எனவும் குவாட்ரன்ட் 0.01 மில்லியன் அதாவது 16,749 புதிய வயர்லைன் பயனர்களை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Gets Fastest Download Speed in march: Vi, Airtel 4G Download Speeds also Increased

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X