Just In
- 1 min ago
அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ
- 3 hrs ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி, ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
- 16 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- 16 hrs ago
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
Don't Miss
- News
காதை கிழித்த விசில் சத்தம்! காலையிலேயே.. ஸ்பெஷல் ஷோவில் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்த்த அமைச்சர் மூர்த்தி!
- Sports
ஐபிஎல் இறுதிப் போட்டி - ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
- Automobiles
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
- Movies
Nenjuku Needhi Review: ஆர்ட்டிக்கள் 15 படத்திற்கு நீதி செய்ததா நெஞ்சுக்கு நீதி? விமர்சனம் இதோ!
- Lifestyle
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- Finance
ஊபரில் இனி ‘நோ கேன்சலேஷன்', ஆனால் கட்டணம் உயரும்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜியோவின் முதல் 5ஜி போன் இது தான்: குருநாதா விலை கம்மியாக இருக்குமா? எப்போது அறிமுகம்?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெக்ஸ்ட் என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து, மிகவும் மலிவான விலையில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கவனத்தை 5ஜி இணக்கத்துடன் கூடிய புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்காக வேலைகளை மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் பரவியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வரவிருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்
ரிலையன்ஸ் ஜியோவின் வரவிருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம். சமீபத்திய அறிவிப்புகள் படி, ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு சென்ட்ரலில் ஒரு அறிக்கையின்படி, நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான ஜியோ நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் 5G ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

ஜியோவின் சமீபத்திய அறிமுகமான ஜியோபோன் நெக்ஸ்ட் விலை என்ன?
ஜியோவின் வரவிருக்கும் 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நெக்ஸ்ட்க்கு அடுத்தபடியாக 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது. ரிலையன்ஸ் தனது முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் ஃபோனை கூகுளுடன் 2021 இல் அறிமுகப்படுத்தியது. இது தீபாவளியன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 ஆக இருந்தது மற்றும் EMI விருப்பங்களுடன் ரூ.1,999 விலையில் பட்ஜெட் சாதனமாக விற்பனைக்கு வந்தது.
ஜியோ வழங்கும் இந்த ஹெவி டேட்டா திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? விலை கூட இவ்வளவு தானா?

ஜியோபோன் நெக்ஸ்ட் விவரக்குறிப்புகள்
ஜியோபோன் நெக்ஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட்டில் இயங்கும் படி அறிமுகம் செய்யப்பட்டது. இது 5.5' இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 13 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவை ஆதரிக்கிறது. அர்ப்பணிக்கப்பட்ட எஸ்டி கார்டு மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கூகுளின் பிரகதி ஓஎஸ் மூலம் இயங்குகிறது. பயனர்கள் Play Store மற்றும் Jio பயன்பாடுகளின் அணுகலைப் பெறுகிறார்கள்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 5G போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
மலிவு விலையில் கூகிளுடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய 5G ஃபோனின் விலை சுமார் ரூ.10,000 இருக்குமென்று, இத்துடன் நிறுவனம் பயனர்களுக்கு 5G திட்டங்களையும் சேர்த்து வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் 5G இயக்கப்பட்ட தொலைப்பேசியின் விலை வெறும் ரூ.10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஜியோ அள்ளிச் செல்ல வாய்ப்புள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?

இந்தியாவில் 1000 நகரங்களில் 5ஜி இணைப்பு தயாரா?
இந்த புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் JioPhone நெக்ஸ்ட் போன்றே, முன்கூட்டிய கட்டணம் மற்றும் EMI விருப்பத்துடன் ஒத்ததாக இருக்கலாம் என்று வெளியான தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த திட்டங்கள், இப்போது ஜியோஃபோன் நெக்ஸ்ட் உடன் வழங்கப்படும் தற்போதைய திட்டங்களைப் போலவே இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இருப்பினும் 5ஜி சேவையை ஜியோ துவங்கிய பின்னர் இது வேறுபடவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் 1000 நகரங்களில் 5ஜி இணைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் சமீபத்தில் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ 5G போன் சிறப்பம்சம்
இந்த புதிய ஜியோ 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 450 சிப்செட் இல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குவால்காம் (Qualcomm) வழங்கும் நுழைவு நிலை சிப்செட் ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்போனின் வன்பொருள் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இந்த சாதனம் USB-C டைப் சார்ஜ் மூலம் சார்ஜ்ஜிங் செய்ய ஆதரிக்கிறது. இது 18W வரை செல்லும் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு வைத்திருக்கும் சிம் கார்டு ட்ரேவை கொண்டுள்ளது.

ஜியோ 5G போனின் கேமரா அம்சம்
புதிய 5ஜி சாதனத்தின் கேமரா அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த JioPhone 5G இதன் முந்தைய தலைமுறை மாடலான ஜியோ போன் நெக்ஸ்ட் போனில் அமைந்த கேமரா விவரக்குறிப்புகளுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் புதிய சாதனமும் பின்புறத்தில் 13MP ஷூட்டர் மற்றும் முன்பக்கத்தில் 8MP கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 6.5' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் கொண்ட 1600 x 720 இல் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் என்ன 5G பேண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது?
ஜியோவின் சேவை நேரலைக்கு வந்தவுடன் தொலைப்பேசி N3, N5, N28, N40 மற்றும் N78 5G பேண்டுகளை ஆதரிக்கும் என்று அறிக்கை கூறுகிறது. புதிய ஸ்மார்ட்போன், JioPhoneNext போலவே PragatiOS இல் இயங்கும். இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலானது மற்றும் கூகுள் பிளே சேவைகள் மற்றும் ஜியோ சூட் ஆப்ஸ் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜியோபோன் 5ஜி எப்போது அறிமுகமாகும்?
ஜியோபோன் 5ஜி எப்போது அறிமுகமாகும்? என்ற கேள்வி தான் இப்போது ஜியோ பயனர்கள் மத்தியில் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. துவக்கத்திற்கான தெளிவான காலக்கெடு என்று எதுவும் வெளியிடப்படவில்லை. 5ஜி அலைக்கற்றை ஏலம் இனி நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் இது தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எது எப்படியாக இருந்தாலும், ஜியோ எப்போதும் அதன் சேவையை மற்ற நிறுவனங்கள் வழங்கும் விலையை விட குறைந்த விலையில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்க்கபோகிறது என்பதில் சந்தேகமில்லை.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999