தீபாவளி முதல் ஜியோபைபர் அதிரடி ஆரம்பம் : ரூ.500/-க்கு 100ஜிபி டேட்டா.!

இஷா அம்பானியின் சமீபத்திய ட்வீட்டின் வழியாக ஜியோபைபர் சேவையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரிய வருகிறது.

|

அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோபைபர் அதிக வேக இணைப்புகளை விரைவில் அறிமுகம் செய்யுமென்று நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகையின் போது ஜியோபைபர் அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியீட்டு தேதியை விட ஜியோபைபர் வழங்கும் நன்மைகள் தான் மிகப்பெரிய செய்தியாக ஆன்லைனை வட்டமடிக்கிறது. ஜியோ 4ஜி சேவையைப் போலவே, ஜியோபைபர் சேவையும் இணைய சந்தையில் ஒரு புயலை கிளப்புமென்று நம்பப்படுகிறது மற்றும் நாட்டின் பிற சேவை வழங்குநர்களுக்கு தீவிர போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

சுவாரஸ்யமான தகவல்

சுவாரஸ்யமான தகவல்

ஜியோபைபர் அதன் பயனர்களின் கைகளுக்கு எப்போது கிடைக்குமென்ற உத்தியோகபூர்வதகவல்கள் இல்லாத நிலையில், இஷா அம்பானியின் சமீபத்திய ட்வீட்டின் வழியாக ஜியோபைபர் சேவையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரிய வருகிறது.

ரூ.500/-க்கு

ரூ.500/-க்கு

முகேஷ் அம்பானியின் மகள் வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஜியோபைபர் சேவையானது 100ஜிபி அதிவேக தரவை வெறும் ரூ.500/-க்கு வழங்குமென்று அறியப்படுகிறது. மேலும் இந்த சேவை 100 நகரங்களில் தீபாவளி முதல் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 ஜிபிபிஎஸ்

1 ஜிபிபிஎஸ்

மிகவும் சுவாரஸ்யமாக, இந்த சேவையின் வேகம் 1 ஜிபிபிஎஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த ட்வீட் மூலமாக, இன்னும் ஒரு சில மாதங்களில் பயனர்களுக்கு இந்த சேவை கிடைக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில்

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில்

குறிப்பிடத்தக்க வகையில், சோதனை நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏற்கனவே ஜியோபைபர் சேவை உள்ளது. மேலும் குறிப்பிட்ட அந்த நகரங்களில் உள்ள சில பயனர்களுக்கு ஜியோபைபர் சேவை கிடைக்கக்கூடியத்தன்மையை பொறுத்து இணைப்பு பெற முடியும்.

இலவசமாக ஜியோபைபர் 100ஜிபி

இலவசமாக ஜியோபைபர் 100ஜிபி

கடந்த ஜூலை மாதம், ஜியோபைபர் விவரங்கள் தற்செயலாக வெளியாகியதும், அந்த லீக்ஸ் தகவலில் ஜியோபைபர் சேவை மற்றும் சாத்தியமான செலவு ஆகியவைகள் அறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தகவலின் கீழ் 100எம்பிபிஎஸ் வேகத்தில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஜியோபைபர் 100ஜிபி தரவை வழங்குமென்றும், 100ஜிபி நுகர்வு வரம்பை மீறிய பின்னர் வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறையுமென்றும் நமக்கு அறிவித்தது.

ரூ.4500/- என்ற ஒரு பாதுகாப்பு வைப்பு நிதி

ரூ.4500/- என்ற ஒரு பாதுகாப்பு வைப்பு நிதி

மேலும், ஜியோபைபர் ரூ.4500/- என்ற ஒரு பாதுகாப்பு வைப்பு நிதியை நிறுவலுக்காக வாங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த விவரங்கள் எதுவும் உத்தியோகபூர்வமற்றவையாகும். சேவையை அறிவிக்கும் நேரத்தில் இந்த விவரங்களில் மாற்றங்கள் இருக்கலாம்.

ஜியோபைபர் ஆரம்ப திட்டமானது

ஜியோபைபர் ஆரம்ப திட்டமானது

முன்னர் லீக்ஸ் ஆன விவரத்தில் ஜியோபைபர் ஆரம்ப திட்டமானது மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், ஜெய்ப்பூர், சூரத், வதோதரா மற்றும் விசாகபட்டிணம் போன்ற இடங்களில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Fiber to provide 100GB data at 1Gbps speed for just Rs. 500. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X