அமேசான் ப்ரைம் ஒரு வருடம் இலவசம்: ஜியோ பயனரா நீங்கள்?
ஜியோ ஃபைபர் சந்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அமேசான் ப்ரைம் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதை பெருவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள்
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களுடன் கூடுதல் செலவில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ அமேசான் பிரைம் ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட திட்டங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் இந்த சலுகை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்ட திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தங்கம் திட்டமானது ரூ.1,299-க்கு கிடைக்கிறது. அதேபோல் வைர திட்டமானது ரூ.2499-க்கு கிடைக்கிறது. மேலும் ஜியோ பிளாட்டினம் திட்டமானது ரூ.3,999-க்கும், டைட்டானியம் திட்டமானது ரூ.8,499-க்கும் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் இலவச சலுகை
அமேசான் பிரைம் இலவச சலுகை ரிலையன்ஸ் ஜியோ தங்கத் திட்டத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஜியோவின் வெண்கலத் திட்டம் ரூ.699-க்கும் சில்வர் திட்டம் ரூ.849-க்கு கிடைக்கிறது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களில் இலவச அமேசான் பிரைம் சலுகைகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ முன்னதாகவே பல்வேறு சலுகைகள்
பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜியோ முன்னதாகவே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமான டேட்டாக்களை வழங்குவதோடு வரம்பற்ற குரல் அழைப்புகளையும் ஜியோ வழங்குகிறது.

மைஜியோ மற்றும் ஜியோ.காம்
இந்த திட்டத்தை ஜியோ ஃபைபர் பயனர்கள் ஜியோ ஃபைபர் தங்கம் அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும். இந்த பயன்பாட்டை மைஜியோ பயன்பாட்டிற்குள் சென்று ஜியோ.காம்-ஐ பயன்படுத்தி ஜியோ ஃபைபர் கணக்கில் உள்நுழைய வேண்டும். அதில் 1 ஆண்டு அமேசான் பிரைம் லாக்-இன் செய்வதின் மூலமாக இந்த இலவச சேவையை ஆக்டிவேட் செய்து பயன்படுத்தலாம்.

ஏர்டெல் வழங்கும் அதே சலுகை
ஜியோ மட்டுமல்ல ஏர்டெல்லும் தங்களது சந்தாதாரர்களுக்கு அமேசான் ப்ரைம் சேவையை வழங்குகிறது. பாரதி ஏர்டெல் ரூ.999 வருடாந்திர திட்டத்தில் இலவச அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்குகிறது. இது ஏர்டெல்லின் ரூ.1,499, அதிகபட்ச விலையான ரூ.3,999 திட்டங்களில் பல்வேறு சலுகைகளோடு அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications