திடீரென ஜியோஃபைபர் திட்டங்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் அறிவிப்பு.!
ஜியோ நிறுவனம் ஏர்டெரல் நிறுவனத்திற்கு போட்டியாக தனது பிராட்பேண்ட் சேவையில் பல்வேறு புதிய சலுகைகளை தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் பிராட்பேண்ட் நீண்ட கால திட்டங்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

10சதவிகிதம் கேஷ்பேக்
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவையில் ஆறு மாதங்கள்,12மாதங்கள் மற்றும் 24மாத திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.இந்த சேவை பிரான்ஸ் திட்டத்தை தேர்வு செய்தோருக்கு பொருந்தாது.

சில்வர், கோல்டு, டைமண்ட்
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10சதவிகிதம் கேஷ்பேக்வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் பிரான்ஸ், சில்வர், கோல்டு, டைமண்ட் மற்றும்பிளாட்டினம் என்ற திட்டங்களில் கிடைக்கிறது.

90நாட்களில் கேஷ்பேக் கிரெடிட்
ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவித்த தகவலின் அடிப்படையில் புதிய கேஷ்பேக் சலுகை ஆனது சில்வர் மற்றும் அதற்கும்அதிகமான திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சரியான பேமெண்ட் முறைகளில் ஜியோஃபைபர் சேவைகள் ரீசார்ஜ் செய்யும் போது 90நாட்களில் கேஷ்பேக் கிரெடிட் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. பிரான்ஸ் திட்டம்ஒருவருட வேலிடிட்டி கொண்டிருப்பதால் கேஷ்பேக் சலுகை பொருந்தாது.

ஆகஸ்ட் மாதம்
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ஜியோஃபைபர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது, எனினும் செப்டம்பர் 5-ம்
தேதி வரை இந்த சேவை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.699 விலையில் 100mbps வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது.

மாத தவணையிலும் செலுத்தாலம்
பின்பு இதனுடன் எச்டி டிவி செட் மற்றும் இலவச லேண்ட்லைன் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக வங்கிகளுடன் இணைந்து மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு வாடிக்கையாளர்கள் வருடாந்திர திட்டங்களை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மாத தவணையிலும் செலுத்தாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
News Source:bgr.in


Click it and Unblock the Notifications