எதிர்பார்ப்பு எகிறுதா?- மலிவு விலை ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோ புக் எப்போது அறிமுகம் தெரியுமா?

|

இந்திய சந்தையில் அறிமுகம் செய்த குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனம் ஜியோ. ஜியோ இந்தியாவில் முதலாவது தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கிறது என்று சொன்னால் அது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரிலையன்ஸ் ஜியோ இந்தாண்டு பிற்பகுதியில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோபுக்கை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்

ஜியோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை கூகுள் உடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இதுகுறித்த ET டெலிகாம் அறிக்கையின்படி இந்தாண்டு நடைபெறும் வருடாந்திர ஜியோ பொதுக் கூட்டத்தில் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோபுக் ஆகிய இரண்டையும் அறிவிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ 5ஜி சாதனத்தை எப்போது அறிவிக்கும்

ஜியோ 5ஜி சாதனத்தை எப்போது அறிவிக்கும்

ஜியோ இரண்டாம் பாதி ஏஜிஎம் நிகழ்வில் புதிய தயாரிப்புகளை அறிவிக்கக்கூடும் என தெரிகிறது. கடந்தாண்டு பொதுக் கூட்டத்திலேயே நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளுக்கான முன்முயற்சிகளை அறிவித்தது. ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் இயக்கத்தில் ஜியோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் குறைந்தவிலை சாதனமாக இருக்கும் எனவும் தெரிகிறது.

ஜியோவின் குறைந்தவிலை மடிக்கணினி

ஜியோவின் குறைந்தவிலை மடிக்கணினி

அதேபோல் இந்தியாவில் குறைந்த கட்டண மடிக்கணினியான ஜியோ புக்கை அறிவிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இடி டெலிகாமின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் குவால்காம் சிப்செட்களால் இது இயக்கக்கூடும் மடிக்கணினியாக உருவாகும் என கூறப்படுகிறது.

WhatsApp இல் வீடியோவை ஷேர் செய்யும்போது அதை எப்படி மியூட் செய்வது? ஈசி டிப்ஸ்..WhatsApp இல் வீடியோவை ஷேர் செய்யும்போது அதை எப்படி மியூட் செய்வது? ஈசி டிப்ஸ்..

ஜியோபுக் உருவாகி வருவதாக தகவல்

ஜியோபுக் உருவாகி வருவதாக தகவல்

ஜியோ நிறுவனம் புதிதாக 'ஜியோபுக்' (JioBook) என்ற மலிவு விலை லேப்டாப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகி வரும் ஜியோ புக், ஜியோ 5ஜி போன்

உருவாகி வரும் ஜியோ புக், ஜியோ 5ஜி போன்

ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது தொழிற்சாலையில் ஜியோபோன் மாடல்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜியோ 5ஜி சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் உடன் கூட்டு சேர்ந்த ஜியோ

கடந்தாண்டு ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதோடு அதில், இந்தியாவில் குறைந்த விலை 5 ஜி ஸ்மார்ட்போன்களை கூட்டாக தயாரிக்க உள்ளதாக அம்பானி அதில் குறிப்பிட்டார். அதோடு கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க இருக்கிறது என அம்பானி அறிவித்தார். தற்போதைய நிலையின்படி 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும்படியான வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக அம்பானி தெரிவித்தார்.

Source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
Reliance Jio Expected to Launch its Jio 5G Smartphone, Jio Book Later this Year: Sources Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X