இருக்கு., ஒரு விருந்தே இருக்கு- ஜியோ போன், ஜியோ லேப்டாப், ஜியோ 5ஜி சேவை: ஜூன் 24 ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வு!

|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஏஜிஎம் பொது நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொது கூட்டமாகும். இது ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2 மணிக்கு நடைபெற தொடங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இந்த நிகழ்வு யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பப்படும். என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வில் 5ஜி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வு 2021

ரிலையன்ஸ் ஏஜிஎம் நிகழ்வு 2021

ரிலையன்ஸ் இந்த ஏஜிஎம் நிகழ்வில் குறைந்த விலை ஜியோ 5ஜி போன், பட்ஜெட் விலை ஜியோ லேப்டாப் ஆக ஜியோ புக், இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 5ஜி போன் இந்தியாவில் ரூ.2500 என்ற விலை பிரிவில் கூட அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜியோ 5ஜி அறிமுகமாகும் என முன்னதாக ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டிருந்தார். முறையான தேதி மாதம் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புக் லேப்டாப்

ரிலையன்ஸ் ஜியோ புக் லேப்டாப்

அதுமட்டுமின்றி இந்த நிகழ்வில் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ புக் லேப்டாப்பை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் குறித்த தகவல் ஒரு புகைப்படத்துடன் லீக் ஆனது. மேலும் இந்த ஜியோ புக் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு

அதுமட்டுமின்றி இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் மற்றொரு வேரியண்ட் ஆக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு உடன் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் புதிதாக 'ஜியோபுக்' (JioBook) என்ற மலிவு விலை லேப்டாப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுடனான ஒரு மெய்நிகர் மாநாட்டின் போது, கம்மி விலை ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவர கூகுள் நிறுவனம் ஜியோவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை. குறிப்பாக குறைந்த விலை ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். பின்பு இந்த திட்டத்தில் முன்னேற கடமைப்பட்டுள்ளோம், அதேசமயம் ஜியோவுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுடனான ஒரு மெய்நிகர் மாநாட்டில் சுந்தர்பிச்சை குறிப்பிட்டார்.

ஜியோ லேப்டாப் குறித்த தகவல்

ஜியோ லேப்டாப் குறித்த தகவல்

ஜியோ லேப்டாப் பற்றி தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ஜியோ லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல்

புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல்

புதிய ஜியோபுக் லேப்டாப் மாடலை உருவாக்க சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோகூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது. ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Reliance May Announced Jio 5G Phone, Jio Laptop, Jio5G Services on June 24

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X