இனி 36 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவினைப் பெறலாம் பிஎஸ்என்எல் இல்.!
ரூபாய் 36க்கு 1 ஜிபி டேட்டா சலுகையை வழங்கி அதிரடி காட்டியுள்ளது பிஎஸ்என்எல்.
ஜியோ வின் வருகைக்குப்பிறகு எல்லா மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள வாய்ஸ் கால், மெசேஜ், இன்டர்நெட் டேட்டா, போன்ற சேவைகளுக்கு விலைகுறைப்பு செய்கின்றன.
ஹவர் பேக் உள்ளிட்ட சேவைகளையும் குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றன.அந்த வரிசையில் இனி 36 ரூபாய்க்கு 1 ஜிபி டாட்டாவினைப் பெறலாம் என அதிரடி காட்டியுள்ளது பிஎஸ்என்எல்.

ஜியோவின் வருகை:
நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக்குழுமமாக பலதுறைகளில் வணிகம் செய்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் பெருமளவில் கால் பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சென்ற ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தியதே ஜியோ ஆகும்.அறிமுக சலுகையாக 31 டிசம்பர் வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்,டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இலவசமாக தரத்துவங்கியது இதன் காரணமாக பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை மிகக் காலத்திலேயே எட்டியது.

சலுகை நீட்டிப்பு:
சென்ற ஆண்டின் இறுதி நாள் வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த ஜியோ வெல்கம் சலுகையினை இந்த ஆண்டின் துவக்கத்தில் நியூ இயர் சலுகை என்று பெயர் மாற்றம் செய்து நீட்டிப்பு செய்தது.இதனை பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் கண்டிக்க செய்தாலும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு நியூ இயர் சலுகையினை தொடர்ச்சியாக வழங்கியே வருகிறது.

பிற நெட்ஒர்க் நிறுவனங்கள்:
தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ வின் அறிமுகமும் தொடர்ச்சியான அதன் சலுகைகளும் பிற நிறுவனங்களை சற்று அசைத்துப்பார்க்கவே செய்தது.சில நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களை பெருமளவு இழந்தன.பிற நிறுவனர்களில் சில ஜியோ வின் இலவச சலுகைகளை கண்டிக்கவும் செய்தன.

விலை குறைப்பு:
இழந்து விட்ட தமது வாடிக்கையாளர்களை திரும்பப் பெறவும் இருக்கிற வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் ஏனைய நிறுவனங்களும் ஹவர் பேக் உள்ளிட்ட புதிய சேவைகளையும் வாய்ஸ் கால்,டேட்டா,மெசேஜ் உள்ளிட்ட தமது சேவைகளுக்கு விலைகுறைப்பு செய்து குறைந்த விலையில் புதிய சலுகைகளை வழங்குகின்றன.

பிஎஸ்என்எல்:
அந்த வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமும் நாடு முழுமைக்கும் 9.95 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில உள்ளது.
பிற நெட்ஒர்க் வாடிக்கையாளர்களும் ஒத்துக்கொள்கிற ஒரு விடயம் பிஎஸ்என்எல் ன் நிலையான நெட்ஒர்க் ஆகும்.சமீபத்தில் கூட சென்னையில் வர்தா புயல் தாக்கத்தின் போது ஏனைய நிறுவனங்கள் இவற்றாலும் சரியான நெட்ஒர்க் சேவையினை வழங்க இயலவில்லை.ஆனால் நிறைவாக எந்தவித தடையுமின்றி நெட்ஒர்க் சேவையினை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே.

ரூ 36க்கு 1ஜிபி:
பிஎஸ்என்எல் நிறுவனமும் தமது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும் விலைகுறைப்பையும் நிகழ்த்தியுள்ளது.அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி ரூ.291க்கு 8ஜிபி சேவையினை பெற முடியும் இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள்.
அதேபோல் ரூ.78 க்கு 2ஜிபி சலுகையினையும் பெற இயலும்.இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே ரூ 36க்கு 1ஜிபி டேட்டா சலுகையினை வழங்கக்கூடிய நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஹவர் டேட்டா பேக் வேண்டுமா உங்களுக்கு?


Click it and Unblock the Notifications