ஜியோவின் ரூ.498/-க்கு போட்டியாக ஏர்டெல் ரூ.499/- அறிமுகம்.!
அப்படியானதொரு சமீபத்திய அறிமுகம் தான் ஏர்டெல் ரூ.499/- போஸ்ட்பெயிட்.!
ஆரம்பத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் திணறிப்போன "இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான" பார்தி ஏர்டெல் ஆனது, மெல்ல மெல்ல மீண்டு ஜியோவின் காம்போ (அதாவது மலிவான விலையின் கீழ் அதிவேக டேட்டா உடன் வரம்பற்ற வாய்ஸ் நன்மைகள்) பாணியை பின்பற்றி மேலே எழுந்தது.

சந்தையில் ஒரு நிலையான இடத்தை அடைந்த பின்னர், பார்தி ஏர்டெல் நிறுவனமானது தனக்கே உரிய பாணியிலான காம்போ வாய்ப்புகளை/ சலுகைகளை போட்டித்தன்மைமிக்க விலையில் அறிமுகம் செய்ய தொடங்கியது. அப்படியானதொரு சமீபத்திய அறிமுகம் தான் ஏர்டெல் ரூ.499/- போஸ்ட்பெயிட்.

அனைத்து வகையான அழைப்பு நன்மை.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.498/- திட்டத்துடன் நேரடியாக போட்டியிடும் இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி, உள்வரும் ரோமிங் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்பு ஆகிய அனைத்து வகையான அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.

செல்லுபடி.!
தவிர செல்லுபடியாகும் மொத காலத்திற்கும் 40ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த ஏர்டெல் ரூ,499/- ஆனது மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 வருடத்திற்கான அமேசான் ப்ரைம் சந்தா.!
இது தவிர, ஏர்டெல் ரூ.499/- உடன் 1 வருடத்திற்கான அமேசான் ப்ரைம் சந்தா நன்மைகளும் மற்றும் வின்க் (Wynk) ம்யூசிக், லைவ் டிவி மற்றும் ஹேண்ட்செட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா.!
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- உடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.498/- நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது 91 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 182ஜிபி அளவிலான அதிவேக டேட்டா கிடைக்கும்.


ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல்.!
உடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். மேலும் பல தொலைத்தொடர்பு அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications