ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுக்கு மட்டும் போட்டி தொல்லை கொடுக்காமல் ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன்களின் சந்தையிலும் போட்டியிட்டது.

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுக்கு மட்டும் போட்டி தொல்லை கொடுக்காமல் ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன்களின் சந்தையிலும் போட்டியிட்டு அணைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளியது.

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்

ஜியோ நிறுவனம் தனது முதல் பியூச்சர் போன் மாடலை 2017 இல் அறிமுகம் செய்தது. ஜியோ பயனர்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் 2 மாடல் போனை இந்த ஆன்ட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஜியோ போன் 2 மாடல் டச் ஸ்கிரீன் உடன் ப்ரீளோடு செயலிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்

4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்

தற்பொழுது நிகழும் போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் தனது திட்டத்தில் மேற்கொண்ட மாற்றங்களைத் தொடர்ந்து அதிரடியாக இன்னொரு முயற்சியையும் மேற்கொள்ளவுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக குறைந்த விலையில் தனது பயனர்களுக்கு 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

200 மில்லியன் 2ஜி பயனர்கள்

200 மில்லியன் 2ஜி பயனர்கள்

இதனால் 200 மில்லியன் 2ஜி பயனர்கள் 4ஜி சேவைக்கு மாற்றப்படுவார்கள், அத்துடன் 900MHz பேண்ட் ஸ்பெக்ட்ரம் அளவில் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவைக் கிடைக்க பெரும். தற்பொழுது ஜியோ நிறுவனம் மட்டுமே முழுமையான வோல்ட்இ 4ஜி சேவையை இந்தியாவில் வழங்கிவருகிறது.

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் விலை

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் விலை

ஏர்டெல் நிறுவனம் முக்கிய நிறுவனங்களுடன் கைகோர்த்து இந்த புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் ஸ்மார்ட்போன்கள் ரூ.2500 என்ற விலையில் விற்பனைக்கு வருமென்று ஏர்டெல் அறிவித்துள்ளது. இத்துடன் சிறப்பு சலுகையாக ரூ.1000 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி சேவை இனி இல்லை

2ஜி சேவை இனி இல்லை

வரும் வருடத்தில் 2ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படுமென்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் 2ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாறும் பயனர்களுக்கு மாதம் ரூ.30 முதல் ரூ.50 மட்டுமே ரீச்சார்ஜ் விலையாக நியமிக்கப்படுமென்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் 3ஜி சேவையும் நிறுத்தப்படுமென்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio effect Airtel to offer cheap Volte smartphones to migrate 2G users to 4G : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X