ஜியோ அதிரடி : அச்சம் காரணமாக ஏர்டெல் விலை குறைக்கப்பட்டதா.??
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு சந்தையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது டேட்டா கட்டணங்களைக் குறைத்தும், பழைய விலைக்கு முன்பை விடக் கூடுதல் டேட்டா வழங்கியும் வருகின்றன. இந்த வரிசையில் மீண்டும் இடம் பிடித்திருக்கின்றது ஏர்டெல் நிறுவனம்.

குறைப்பு
முன்பு வழக்கமாக வழங்கப்பட்டதை விடக் கூடுதல் டேட்டா வழங்கிய ஏர்டெல் நிறுவனம் மீண்டும் விலை குறைப்பு மற்றும் டேட்டா அதிகரிப்பு சார்ந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விலை
அதன் படி புதிய விலைப்பட்டியால் 80 சதவீதம் வரை இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை ஏர்டெல் நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் விசேஷ சலுகையின் கீழ் ஏர்டெல் 3ஜி / 4ஜி சேவைகள் 1 ஜிபி டேட்டா ரூ.51க்கு வழங்கப்படுகின்றது.

சலுகை
இந்த புதிய சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.1498க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது 1 ஜிபி 3ஜி / 4ஜி சேவையை 28 நாட்களுக்குப் பெற முடியும்.

ரீசார்ஜ்
பின் 12 மாதங்களுக்கு எத்தனை முறையானாலும் ரூ.51க்கு ரீசார்ஜ் செய்து 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா பெற முடியும், என ஏர்டெல் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணம்
தற்சமயம் வரை ஏர்டெல் 1ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா கட்டணமாக ரூ.259 வசூலிக்கப்படுகின்றது. இதோடு ரூ.748க்கும் ஏர்டெல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் படி சுமார் ஆறு மாதங்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.99க்கு பெற முடியும்.

சேவை
தற்சமயம் இந்த ஏர்டெல் புதிய ப்ரீபெயிட் சேவைத் தில்லியில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டு, 31, 2016க்குள் பிற நகரங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படும் என ஏர்டெல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்கம்
டேட்டா கட்டணங்களில் புதிய சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ஜூலை மாதம் முதல் வழங்கி வருகின்றது. முன்னதாக 67 சதவீதம் வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. பின் இதே வழிமுறைகளை ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் பின்பற்றின.

இலவசம்
ஆகஸ்டு மாதத்திலேயே ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் கால் சேவைகளை ரூ.1199க்கு இலவசமாக வழங்கியது. இதில் ரோமிங் அழைப்புகளும் அடங்கும். இதே திட்டத்தில் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டாவும் வழங்கப்பட்டது.

ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவைகளுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன.

நீட்டிப்பு
ரிலையனஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவையானது லைஃப் அல்லாத பல்வேறு இதர நிறுவனங்களின் 4ஜி கருவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications