டிராய் வெளியிட்ட 4ஜி டவுன்லோட் ஸ்பீட் டெஸ்ட்.! ஏர்டெல்? ஜியோ?

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் சராசரியாக 17.8 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி பதிவிறக்க வேகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜியோவின் பதிவிறக்க வேகம்

ஆனாலும் கடந்த செப்டம்பர் 2020-ல் ஜியோவின் பதிவிறக்க வேகம் 19.1 எம்.பி.பி.எஸ் ஆக இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது, இருப்பினும் ஜியோ முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

முன்னேற்றம் தெரிகிறது என்று

மேலும் ஜியோ நிறுவனத்திற்கு அடுத்ததாக நம்பமுடியாத வண்ணம் ஐடியா நிறுவனம் 9.1Mbps என்கிற வேகத்தை பதிவு செய்துள்ளது. இது டிராய் அமைப்பின் மைஸ்பீட் போர்ட்டலில் முன்பு பதிவுசெய்யப்பட்ட 8.6Mbps இலிருந்து 0.5Mbps அதிகமாகும், எனவே ஐடியா சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது என்று தான் கூறவேண்டும்.

BSNL வழங்கும் இலவச சிம் கார்டை பெறுவது எப்படி? நிபந்தனைகளுக்கு உட்பட்டது..

 நிறுவனங்களாக கணக்கிடுகிறது

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் டிராய் அமைப்பு அதன் மைஸ்பீட் போர்ட்டலில் வோடபோன் மற்றும் ஐடியாவை இரண்டு தனித்தனி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக கணக்கிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்த அதன் சராசரி ப

ஜியோ நிறுவனம் 4ஜி பதிவிறக்க வேகத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் போதும் கூட மேலே குறிப்பிட்டுள்ளபடி இது கடந்த அக்டோபரில் பதிவு செய்த அதன் சராசரி பதிவிறக்க வேகத்தை விட 1.5 எம்.பி.பி.எஸ் இழப்பை கண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 வோடபோன் நிறுவனம்

டிராய் அமைப்பின் மைஸ்பீட் போர்ட்டலின் தகவல்படி, அப்டோபரில் 4ஜி பதிவிறக்க வேகங்களின் பட்டியலில் வோடபோன் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வோடபோன் சராசரியாக 8.8Mbps என்கிற வேகத்தை பதிவு செய்துள்ளது. இது முன்னர் பதிவுசெய்யப்பட்ட 7.9Mbps இலிருந்து அதிகரித்துள்ளது.

யை அறிவிக்கும் போது, அது

குறிப்பாக ஜியோ நிறுவனம் அக்டோபர் இரண்டாவது காலாண்டில் அதன் வருவாயை அறிவிக்கும் போது, அது 40 கோடிக்கும் சந்தாதாரர்களை கொண்டுள்ளது வெளிப்படுத்தியது. அண்மையில் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களின் சந்தாதாரர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் அட்டகாசமான போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்படியாக உலகளவில் ஒரே நாட்டில் 400 கோடி சந்தாதாரர்களை கடந்த நிறுவனம் என்கிற புகழை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio dominates 4G download speeds at 17.8Mbps: TRAI: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X