தீபாவளியை முன்னிட்டு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கிய ஜியோ.!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளியை முன்னிட்டு இன்று புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி தண் தணா தண் சலுகையில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு 100 சதவிகிதம் கேஷ்பேக்  வழங்கிய ஜியோ.!

இந்த கேஷ்பேக் பொறுத்தவரை பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கூப்பன்களாக வழங்கப்படுகிறது, அதன்பின் இந்த சலுகையை அடுத்த ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 12:

அக்டோபர் 12:

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த கேஷ்பேக் ஆஃபர் பொறுத்தவரை அக்டோபர் 12-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை
வழங்கப்படுகிறது, இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 19:

அக்டோபர் 19:

அக்டோபர் 19-ம் தேதி முதல் புதிய விலைப்பட்டியலை கொண்டுவர ஜியோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோவில்
பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூ.399 ரீசார்ஜ்:

ரூ.399 ரீசார்ஜ்:

தீபாவளியை முன்னிட்டு இப்போது வழங்கப்படும் கேஷ்பேக் சலுகையில் ரூ.399-க்கு ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு 100 தவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.

  தினசரி 1ஜிபி டேட்டா :

தினசரி 1ஜிபி டேட்டா :

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399 ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84-நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை இந்த ரீசார்ஜ் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

 எட்டு கூப்பன்கள்:

எட்டு கூப்பன்கள்:

தீபாவளியை சலுகையை பெற ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை கூப்பன்களை நவம்பர் 15-ம் தேதி முதல் ஒரு சமயத்தில் ஒரே கூப்பன்களைபயன்படுத்தும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12:

நவம்பர் 12:

ஜியோ வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டம் நிறைவுற்றதும் இந்த புதிய தண் தணா தண் வேலிடிட்டி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே நவம்பர் 12-ம் தேதி உங்களது தற்போதைய திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில், இந்ததீபாவளி சலுகை ஆக்டிவெட் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Diwali offer gets you 100 percent cashback on every recharge of Rs 399; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X