இந்த 12 Jio ரீசார்ஜ் பிளானில் Disney+ Hotstar கட்.! உங்க பிளான் இதில இருக்கா செக் பண்ணுங்க.!

|

இந்த மாதத்தில் எது தேவையோ இல்லையோ.. கட்டாயமாக நம் எல்லோரிடமும் குறைந்தது ஒரு பேசிக் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவாவது இருக்க வேண்டும்.. காரணம், தமிழ்நாட்டில் ஒரு பக்கம் பிக்பாஸ் 6 (BigBoss 6) மோகம் மக்களைச் சூழ்ந்துள்ளது.

மற்றொரு புறம் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் T20 தொடர் மேட்ச்களை காண ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். பெரும்பாலான ஜியோ (Jio) பயனர்களுக்கு, அவர்களுடைய ப்ரீபெய்ட் திட்டத்துடன் Disney+ Hotstar சந்தா கிடைத்துவிடுகிறது.

எது..? ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் கிடைத்த Disney+ Hotstar சந்தா இனி கிடைக்காதா?

எது..? ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் கிடைத்த Disney+ Hotstar சந்தா இனி கிடைக்காதா?

இத்தனை நாட்களாக ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் (Jio Prepaid Recharge Plans) வழங்கப்பட்டு வந்த Disney+ Hotstar சந்தாவை ரிலையன்ஸ் நிறுவனம், இப்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல், சைலெண்டாக நிறுத்திவிட்டது.

ஆம், இதற்கு முன் நீங்கள் Disney+ Hotstar சந்தாவுடன் ரீசார்ஜ் செய்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் இப்போது நீக்கிவிட்டது.

சுமார் 10-க்கும் மேற்பட்ட ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் உடன் கிடைத்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச நன்மையை (Free Disney+ Hotstar Benefit) ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியுள்ளது.

இப்படி ஒரு செயலை சற்றும் எதிர்பார்க்காத Jio வாடிக்கையாளர்கள்.!

இப்படி ஒரு செயலை சற்றும் எதிர்பார்க்காத Jio வாடிக்கையாளர்கள்.!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இப்படி ஒரு காரியத்தை சைலெண்டாக செய்யுமென்று வாடிக்கையாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஜியோ இதற்கு முன், ரூ.151 ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம் முதல் ரூ.3,119 விலை வரை கிடைக்கும் மொத்தம் 14 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் Disney+ Hotstar சந்தாவை வழங்கி வந்தது.

இதில் இப்போது, சரியாக 12 ரீசார்ஜ் திட்டங்களுடன் கிடைக்கும் Disney+ Hotstar சந்தா திட்டங்களை ஜியோ தனது பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

1 ஆண்டு வரையிலான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைக்கு என்ன ஆச்சு?

1 ஆண்டு வரையிலான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைக்கு என்ன ஆச்சு?

ஜியோ தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் 1 ஆண்டு வரையிலான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை (Disney+ Hotstar Mobile Subscription) வழங்கி வந்தது.

ஆனால், இப்போது 12 ரீச்சார்ஜ் திட்டங்களை அமைதியாக எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியுள்ளது. ஜியோ இப்போதைக்கு, 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா கிடைக்கும் 2 ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது.

ஆனால், இவை இரண்டும் விலை உயர்ந்த திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இனி Disney+ Hotstar கிடையாதா?

இந்த 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இனி Disney+ Hotstar கிடையாதா?

ஜியோவால் நிறுத்தப்பட்ட Disney+ Hotstar உடனான அனைத்து ஜியோ திட்டங்களின் பட்டியலை இங்குக் கீழே தொகுத்துள்ளோம்.

இதில் இதற்கு முன் நீங்கள் ரீசார்ஜ் செய்த Disney+ Hotstar சந்தா கிடைக்கும் திட்டங்கள் இருக்கிறதா என்று செக் செய்து பாருங்கள்.

தற்போது, பின்வரும் 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இருந்து ஜியோ இலவசமாக வழங்கிய Disney+ Hotstar சந்தாவை நிறுத்தியுள்ளது. நீங்கள் தேடி வந்த ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ.!

WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?

உங்க Jio ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் இதுல இருக்கா?

உங்க Jio ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் இதுல இருக்கா?

1. ஜியோ ரூ.151 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
2. ஜியோ ரூ.555 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
3. ஜியோ ரூ.659 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
4. ஜியோ ரூ 333 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
5. ஜியோ ரூ 499 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
6. ஜியோ ரூ 583 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

இனி இந்த ரீசார்ஜ் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கட்.!

இனி இந்த ரீசார்ஜ் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கட்.!

7. ஜியோ ரூ 601 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
8. ஜியோ ரூ 783 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
9. ஜியோ ரூ 799 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
10. ஜியோ ரூ 1066 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
11. ஜியோ ரூ.2999 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
12. ஜியோ ரூ.3119 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!

இனி Disney+ Hotstar இலவச நன்மை கிடைக்காதா?

இனி Disney+ Hotstar இலவச நன்மை கிடைக்காதா?

மேற்கூறிய திட்டங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் (Jio Website List) காணப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், T20 உலகக் கோப்பை இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், ஜியோ திருத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தளத்தில் புதிய விலை மற்றும் நன்மைகளுடன் அறிமுகம் செய்யுமென்று நம்புகிறோம்.

இருப்பினும், இது குறித்து நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போது குறைந்த விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கிடைக்கும் பிளான் இது தானா?

இப்போது குறைந்த விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கிடைக்கும் பிளான் இது தானா?

தற்போதைய நிலவரப்படி, 2 திட்டங்கள் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் வருகிறது.

இதில், முதலாவது திட்டம் ரூ. 1,499 விலையில், 84 நாள் வேலிடிட்டி உடன் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சாந்தா கிடைக்கும் Jio Prapaid Plan

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சாந்தா கிடைக்கும் Jio Prapaid Plan

அதேபோல், ஜியோவின் மற்றொரு திட்டமான ரூ. 4,199 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டத்துடன் நிறுவனம் இப்போது 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் கிடைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சாந்தாவின் விலை தனியாக வாங்கினால் ரூ.1,499 என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன் இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இது தவிர மற்ற அணைத்து நன்மைகளும் நாம் மேலே பார்த்த திட்டத்துடன் ஒற்றுமையானது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Discontinues 12 Prepaid Recharge Plans Offering Disney+ Hotstar Subscription

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X