Home
News

ரூ.309/- முதல் புதிய அன்லிமிடெட் சலுகைகளை அறிமுகம் செய்தது ஜியோ.!

"தண் தணா தண்" என்ற புதிய பெயரின் கீழ் புதிய ஜியோ அன்லிமிடெட் திட்டங்கள்.!

ட்ராய் விதித்த கெடுக்குபிடிகள் காரணமாக ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய சம்மர் சர்ப்ரைஸ் சலுகை திரும்பபெறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் அதன் சில வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதை உணர்ந்து நேற்று புதிய மற்றும் அற்புதமான சலுகைகளை ரிவிரைவில் வழங்குவோம்ன் என்று அதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் அறிவித்திருந்தது.

அறிவித்ததை போலவே ஜியோ அதன் புதிய கட்டண திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. "தண் தணா தண்" என்ற புதிய பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோவின் புதிய அன்லிமிடெட் திட்டங்கள் ஆனது ரூ.309/-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் என்னென்ன திட்டங்கள்.? அவைகளின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ஜியோ தண் தணா தண் ஆஃபர் விவரங்கள்

ஜியோ தண் தணா தண் ஆஃபர் விவரங்கள்

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஜியோ அறிமுகம் செய்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை தவறவிட்ட பயனர்கள் அதே வகையிலான நன்மைகளை பெற நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் ரூ.309/- முதல் ஆரம்பிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு பகுதி

இரண்டு பகுதி

ஜியோவின் இந்த தண் தணா தண் வாய்ப்பு இரண்டு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா அல்லது நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என இரண்டு வகையான கட்டண திட்டங்களை பெறலாம்.

ரூ.309/-

ரூ.309/-

1ஜிபி திட்டம் ரூ.309/- என்ற தொடக்க விலை கொண்டுள்ளது மற்றும் அது 84 நாட்களில் செல்லுபடியாகும். இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி அதிவேக 4ஜி டேட்டா பெறலாம் மேலும் நீங்கள் 128கேபிபிஎஸ் என்ற இணைய வேகத்தில் தொடர்ந்து டேட்டா பயன்படுத்தலாம் உடன் இந்த தொகுப்பில் அதே வரம்பற்ற அழைப்புகள் வசதியும் உண்டு.

ரூ.349/-

ரூ.349/-

நீங்கள் ஏற்கனவே ஒரு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் என்றால் இந்தத் திட்டத்தை நீங்கள் ரூ.309/-க்கும் அதே நன்மைகளை ஜியோ ப்ரைம் மெம்பராக இல்லாத பயனர்கள் பெற ரூ.349/- செலுத்த வேண்டும்.

ரூ.408/-

ரூ.408/-

மேலும் ஜியோ ப்ரைம் சேவையுடன் சேர்த்து இந்த திட்டத்தையும் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் இதே நன்மைகளை அனுபவிக்க ரூ.408/- செலுத்த வேண்டும், அதாவது ரூ.99/- என்ற ப்ரைம் சேவை கட்டணம் சேர்த்து ரூ.408).

ஜியோ 2ஜிபி திட்டங்கள்

ஜியோ 2ஜிபி திட்டங்கள்

இதேபோன்று மறுபக்கமும் நாள் ஒன்றிற்கு 2ஜிபி வழங்கும் திட்டங்களின் விலைரூ.509/- முதல் தொடங்குகிறது மற்றும் இதுவும் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதன் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான அதிவேக 4ஜி தரவை 128 கே பிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம், உடன் இந்த தொகுப்பில் அதே வரம்பற்ற அழைப்புகள் வசதியும் உண்டு.

ரூ.509/-

ரூ.509/-

நீங்கள் ஏற்கனவே ஒரு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் என்றால் இந்தத் திட்டத்தை நீங்கள் ரூ.509/-க்கும் அதே நன்மைகளை ஜியோ ப்ரைம் மெம்பராக இல்லாத பயனர்கள் பெற ரூ.549/- செலுத்த வேண்டும்.

ரூ.608/-

ரூ.608/-

மேலும் ஜியோ ப்ரைம் சேவையுடன் சேர்த்து இந்த திட்டத்தையும் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் இதே நன்மைகளை அனுபவிக்க ரூ.608/- செலுத்த வேண்டும், அதாவது ரூ.99/- என்ற ப்ரைம் சேவை கட்டணம் சேர்த்து ரூ.608).

மேலும் படிக்க

மேலும் படிக்க

300ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி திட்டம்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Dhan Dhana Dhan Offer Unlimited Data Plans Start At Rs. 309. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X