இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!

|

கொரோனா அச்சம் காரணமாக பலரும் வீட்டிலேயே தேங்கும் நிலை நீடித்து வரும் நிலையில் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை, பல்வேறு அலுவலகத்தில் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கூட்டம் கூடும் இடங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே வேலை

வீட்டில் இருந்தபடியே வேலை

பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகிறது. அதேபோல் ஏராளமானோர் தொழிலுக்கு அப்பாற்பட்டு தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஏதுவாக ஜியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

இந்த டேட்டா வவுச்சர் திட்டங்களின் பெயர் குறிப்பிடுவது போல, இவை டேட்டா டாப்-அப்களாக மட்டுமே செயல்படுகின்றன. அதாவது, பயனர் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் இந்த கூடுதல் டேட்டா நன்மையையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம், அப்படியே இந்த டேட்டா வவுச்சர்களுக்கும் வழங்கப்படுகிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது

டேட்டா வவுச்சரின் முந்தைய விபரங்கள்

டேட்டா வவுச்சரின் முந்தைய விபரங்கள்

  • ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.11 டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு 400 எம்.பி 4 ஜி டேட்டா வழங்கப்பட்டது.
  • அதன்பிறகு, ரூ.21 வவுச்சரின் கீழ் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
  • அதேபோல், ரூ.51 திட்டத்தின் கீழ் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
  • இறுதியாக, ரூ.101 வவுச்சரின் கீழ் அதிகப்படியாகப் பயனருக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
  • தற்போது கூடுதலாக வழங்கப்படும் திட்டங்கள்
  • 75 நிமிடம் காலவரையறை

    75 நிமிடம் காலவரையறை

    ரூ.11-க்கு வழங்கப்படும் திட்டங்களானது அன்லிமிட்டெட் ஜியோ டூ ஜியோ கால் வழங்குகிறது அதோ 800 எம்பி இணையதள சேவையையும் வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுக்கு 75 நிமிடம் காலவரையறை வழங்குகிறது.

    அன்லிமிட்டெட் கால் வசதி

    அன்லிமிட்டெட் கால் வசதி

    அதேபோல் ரூ.21-க்கு வழங்கும் திட்டமானது அன்லிமிட்டெட் கால் வசதியும் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையும் 200 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது.

    ரூ.51-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு 6 ஜிபி டேட்டே மற்றும் 500 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது.

    ரூ.101-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல்அழைப்பு ஆனால் இதில் 12 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும் இதில் 1000 நிமிட ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது.

    ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர்

    ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர்

    காம்போ திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் இந்த நான்கு புதிய டேட்டா வவுச்சர்கள் வரம்பற்ற காம்போ திட்டங்களின் மேல் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் கூட, ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் திட்டத்தைப் பயனர்கள் ஒரு முழுமையான திட்டமாகப் தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை தேவையில்லை என்ற பயனர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்

    தினசரி 2 ஜிபி டேட்டா

    தினசரி 2 ஜிபி டேட்டா

    ரூ.251-க்கும் திட்டத்தை பொருத்தவரையில் அட்டகாச சலுகை என்றே கூறலாம் இதில் எந்தவித குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் என எதுவும் வழங்குவதில்லை இருப்பினும் இதில் தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் மொத்தம் 102ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance jio data voucher plans extra offering in same price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X