Home
News

இதுக்குமேல அவ்ளோதான்.. ஒன்னா, ரெண்டா? மொத்தம் 7 டேட்டா பிளான்கள்.. அதிகபட்சம் 50 ஜிபி டேட்டா.. கட்டுபடியாகுமா?

ஜியோ டேட்டா பிளான்களில் (Jio Data Plans) சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 2 டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மொத்த டேட்டா பிளான்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. இந்த பிளான்களின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தில் அடுத்தடுத்து அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) அறிமுகம் செய்யப்பட்டதும், அதோடு ஜியோ பாரத் பிளான் (Jio Bharat Plan) அறிவிப்பு வெளியாகியது. இந்த பிளான்கள் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்க முடியாத மலிவான விலையில் இருக்கின்றன.

கட்டுபடியாகுமா? ஒன்னுல ரெண்டுல மொத்தம் 7 டேட்டா பிளான்கள்!

இப்படிப்பட்ட சூழலில், ஜியோ டேட்டா பிளான்களில் ரூ.19 மற்றும் ரூ.29 விலையில் இரண்டு டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், முன்னதாக இருந்த ரூ.15 மற்றும் ரூ. 25 டேட்டா பிளான்களில் ரூ.4 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அதன்பின்பு, இந்த பிளான்கள் புதியவை என்பதும், ரூ.15 மற்றும் ரூ.25 திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதும் தெரிய வந்தது.

இந்த புதிய பிளான்கள் விலைக்கு ஏற்ப கூடுதல் டேட்டாவையும் கொண்டுள்ளது. அதாவது, ரூ. 19 டேட்டா பிளானானது, ரூ. 15 டேட்டா பிளானைவிட கூடுதலாக 500 எம்பி டேட்டாவுடன் மொத்தம் 1.5 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. அதேபோல ரூ. 29 டேட்டா பிளானானது, ரூ. 25 டேட்டா பிளானைவிட கூடுதலாக 500 எம்பி டேட்டாவுடன் 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

ஆகவே, புதிய பிளான்களால் பழைய டேட்டா பிளான்களுக்கு எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், மொத்த பிளான்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. ரூ. 100க்கும் குறைவாக 5 பிளான்களும், ரூ.100 க்கும் மேல் 2 பிளான்களும் இருக்கின்றன. இந்த பிளான்களின் மொத்த விவரங்கள் பின்வருமாறு.

ஜியோ டேட்டா பூஸ்டர் பிளான்கள் (Jio Data Booster Plans): ஜியோவில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அல்லாமல், முழுக்க முழுக்க டேட்டா மட்டுமே கிடைக்கூடிய வகையில், மொத்தம் 5 பிளான்கள் இருக்கின்றன. இந்த 5 பிளான்களும் ரூ. 100க்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பிளான்களாகும்.

அந்த வகையில், ரூ 15 டேட்டா பிளான், 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ 19 டேட்டா பிளான் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ 25 டேட்டா பிளான் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ 29 டேட்டா பிளான் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ 61 டேட்டா பிளான் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த விலைக்கும் மேல் 2 டேட்டா பூஸ்டர் பிளான்கள் இருக்கின்றன. ரூ 121 டேட்டா பிளானில் (Rs 121 Data Plan) 12 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். அதேபோல ரூ 222 டேட்டா பிளானில் (Rs 222 Data Plan) 50 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இந்த டேட்டா பிளான்களில் 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பிளான்களின் வேலிடிட்டியை பொறுத்தவரையில், உங்களது வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பிளானில் எத்தனை நாட்கள் வேலிடிட்டி இருக்கிறதோ அதுநாள் வரையில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Data Booster Plans 2023 With Rs 15, Rs 19, Rs 25, Rs 29 And Rs 61 Details, Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X