மாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும்.! அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.!

|

சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்காது என்ற அறிவித்தது, பின்பு அதனை தொடர்ந்து நிமிடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தையும் கொண்டுவந்தது ஜியோ நிறுவனம்.

 6பைசா என்கிற கட்டணம்

6பைசா என்கிற கட்டணம்

ஜியோ நிறுவனம் அறிவித்த இந்த 6பைசா என்கிற கட்டணம் வாடிக்கையாளர்களிடையே விவாதத்தை துண்டியது பின்பு பல்வேறு மக்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பின்பு சிலர் ஜியோ நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஐ.யூ.சி கட்டணங்கள்

ஐ.யூ.சி கட்டணங்கள்

அதன்பின்பு ஏர்டெல், வோடபோன், ஜடியா போன்ற நிறுவனங்களும் ஜியோவின் இந்த நடவடிக்கையை கேலி செய்த வண்ணம் உள்ளனர். ட்விட்டர் தளத்தில் இந்த அறிவிப்புக்கு பெரிய கருத்து சண்டையே நடக்கிறது. மேலும் ஐ.யூ.சி கட்டணங்கள் தொடர்பாக ஜியோ தனது நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சித்த வண்ணமே உள்ளது. இது தொடர்பாக ஜியோ நிறுவனம் இப்போது ஒரு புதிய விளக்கம் ஒன்றும் அளித்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

வெறும் 12ரூபாய்

வெறும் 12ரூபாய்

ஜியோ தனது டிவிட்டர் பதிவின் வழயாக தெரிவித்தது என்னவென்றால, புதிய ஐ.யூ.சி கட்டணங்கள் ஆனது விமர்சிக்கப்படுவது போல பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது.

அதாவது டிராய் அமைப்பின் தரவின் படி, ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளருக்கான சராசரி iuc கட்டணம் ஆனது ரூ.12 ஆகும். இந்த கணக்கின் கீழ் அவரும் iuc நிமிடங்களைப் பொறுத்தவரை, மாதத்திற்கு மற்ற நெட்வொர்க்குகள் உடனான 200நிமிட அழைப்புகள் ஆகும். குறிப்பிட்டு ஜியோ சொல்லுவது என்னவென்றால் ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு மாதத்திற்கு வெறும் 12ரூபாய் செலவு செய்தால் மட்டுமே போதும்.

லேண்ட்லைன் அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வைத்திருக்கிறது

லேண்ட்லைன் அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வைத்திருக்கிறது

தற்காலத்தில் 12ரூபாய் என்பது ஒரு பெரிய அளவிலான தொகை அல்ல என்று கூறி ஜியோ அதன் அழைப்பு கட்டண விகிதத்தை நியாயப்படுத்தி உள்ளது. பின்பு மற்ற ஜியோ நெட்வோர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வைத்திருக்கிறது என்பதையும்நினைவூட்டியுள்ளது..

இருந்தபோதிலும் மற்ற நெட்வொர்க்குகளுடன் ஒப்பிடும்போது நீங்கள் கூடுதல் செல்லுபடியாகும் காலத்தை பெற சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி நிலை உள்ளது. இந்த இடத்தில் ஜியோ கூறும் ரூ.12 மாதம் என்கிற கட்டணம்
ஆனது நியாயமானதாகவே தெரிகிறது.

பூஜ்ஜிய ஐ.யூ.சி

பூஜ்ஜிய ஐ.யூ.சி

மலிவான ஜியோபோன் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்றால், நீங்கள் இதை மறுபரீசிலனை செய்யலாம். தற்போதைய ஐ.யூ.சி கட்டணங்கள் ஆனது வருகிற டிசம்பர் 31, 2019 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு டிராய் பூஜ்ஜிய ஐ.யூ.சி கட்டணங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஜியோ எதிர்பார்க்கிறது.

ஆனாலும் பெரும்பாலா ஜியோ பயனர்கள் ஜயோ தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது என்று கூறி வருகின்றனர். மேலும் ஜியோ அறிவித்த இந்த புதிய கட்டண அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் கால் அழைப்புகள் மற்றும் டேட்டா சலுகையை அறிவிக்க தொடங்கிவிட்டன.

Best Mobiles in India

English summary
Reliance Jio Customers Make Only Rs 12 Worth of Outgoing Calls to Other Networks Every Month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X