ஜியோ மஹா கேஷ்பேக் சலுகை விபரம்: எந்த திட்டத்திற்கு எல்லாம் கேஷ் பேக் நன்மை? குழப்பம் வேண்டாம்..

|

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்தத் திட்டங்களுக்குப் பொருந்தும் என்பதை அறிந்துகொள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் கொஞ்சம் குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது. உண்மையைச் சொல்லப் போனால், பெரும்பாலான ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை பற்றிய தகவலைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. முன்னதாக, ஜியோ நிறுவனம் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையை அறிவித்தபோது, ​​அந்தச் சமயத்தில் ரூ. 299, ரூ. 666 மற்றும் ரூ. 719 ஆகிய மூன்றாக இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று பலர் கருதினர். ஆனால் அது அப்படி இல்லை.

யாருக்கெல்லாம் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை கிடைக்கும்?

ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களிள் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவை இறுதி வரை தொடர்ந்து படியுங்கள். ஜியோ நிறுவனத்தின் அறிவிப்புப் படி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த கேஷ் பேக் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது ஜியோவின் எந்தெந்த திட்டங்களில் எல்லாம் இந்த கேஷ் பேக் சலுகை கிடைக்கும் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஜியோவின் அறிவிப்பு தகவல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

ஜியோவின் நிறைய நுகர்வோர் குழப்பத்தில் உள்ளதற்கு காரணம் என்ன?

ஜியோவின் நிறைய நுகர்வோர் குழப்பத்தில் உள்ளதற்கு காரணம் என்ன?

ஜியோ நிறுவனம் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாததால், நிறைய நுகர்வோர் குழப்பத்தில் உள்ளனர். ரிலையன்ஸ் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையானது அதன் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 20% முதல் ரூபாய் 200 அல்லது அதற்கு மேல் செலவாகும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஜியோ பயனர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஜியோவின் மூன்று முக்கிய திட்டங்களுடன் மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று தவறாக கருதிவிட்டனர்.

ரயில் பயணிகளின் கவனத்திற்கு.! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு தடை.. மீறினால் ரூ.500 அபராதமா?ரயில் பயணிகளின் கவனத்திற்கு.! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு தடை.. மீறினால் ரூ.500 அபராதமா?

 மூன்று திட்டங்களுக்கு மட்டும் தான் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையா?

மூன்று திட்டங்களுக்கு மட்டும் தான் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையா?

குறிப்பாக இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை என்பது மூன்று திட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஜியோ சில்லறை விற்பனையின் கேஷ்பேக் திட்டம் குறித்து வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். நாளின் முடிவில் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், ஜியோவின் அறிவிப்பு இல்லாததால், கேஷ்பேக்கிற்கான ரூ. 299, ரூ. 666 அல்லது ரூ. 719 திட்டத்தை மட்டுமே பயனர்கள் தொடர்ந்து தேர்வு செய்து வருகின்றனர்.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்த திட்டத்திற்கு எல்லாம் பொருந்தும்?

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்த திட்டத்திற்கு எல்லாம் பொருந்தும்?

ஆனால், உண்மையில் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையானது, ஜியோவின் ரூ. 200 விலை மற்றும் அதற்கும் மேல் உள்ள ஒவ்வொரு வரம்பற்ற நன்மை ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் இது தகுதியுடையது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். பயனர்கள் ஜியோவிடமிருந்து தங்களுக்குப் பிடித்த எந்தவொரு ப்ரீபெய்ட் கட்டணங்களுடனும் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையை நெகிழ்வாக ரீசார்ஜ் செய்து பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆகையால், பட்ஜெட்டிற்குள் ரீசார்ஜ் செய்பவர்களும் இதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

ஒரு நாளில் பெறக்கூடிய அதிகபட்ச கேஷ்பேக் தொகை எவ்வளவு?

ஒரு நாளில் பெறக்கூடிய அதிகபட்ச கேஷ்பேக் தொகை எவ்வளவு?

ஜியோ வாடிக்கையாளர் ஒரு நாளில் பெறக்கூடிய அதிகபட்ச கேஷ்பேக் தொகை என்பது ரூ. 200 ஆகும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் மைஜியோ பயன்பாடு அல்லது நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஜியோவுடனான அடுத்த ரீசார்ஜில் இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையின் மூலம் கிடைக்கும் 20% கேஷ்பேக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கேஷ்பேக் தொகை அல்லது புள்ளிகள் ரிலையன்ஸ் ரீடெய்ல் சேனல்களிலும் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 3ஜிபி டேட்டா.. அதுவும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வேண்டுமா? அப்போ இந்த திட்டங்கள் தான் பெஸ்ட்..தினமும் 3ஜிபி டேட்டா.. அதுவும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வேண்டுமா? அப்போ இந்த திட்டங்கள் தான் பெஸ்ட்..

ஜியோ பயனர்கள் எப்போது இந்த கேஷ் பேக் நன்மையை பயன்படுத்திக்கொள்ளலாம்?

ஜியோ பயனர்கள் எப்போது இந்த கேஷ் பேக் நன்மையை பயன்படுத்திக்கொள்ளலாம்?

ஜியோவின் டெலிகாம் சமூகத்தில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் இப்போது வரை இந்த கேஷ் பேக் கொள்கையின் முழு விபரம் தெரியாமல் மாற்றம் தெரிந்த சில தகவலால் சிறிது குழப்பத்தில் இருந்தனர். ஜியோ பயனர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் கேஷ்பேக் மூலம், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் அடுத்த ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜில் தள்ளுபடிகளைப் பெற்று மகிழலாம். இது பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட பிற தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு எதிராக அமைத்துள்ளது.

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை மிகவும் மலிவானதாக்கும் கேஷ் பேக் சலுகை

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை மிகவும் மலிவானதாக்கும் கேஷ் பேக் சலுகை

இந்த ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை மிகவும் மலிவான மற்றும் அற்புதமான மாற்றாக மாற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஜியோவின் திட்டங்கள் ஏற்கனவே குறைந்த விலையில் கிடைக்கின்றன, இப்போது இந்த கேஷ் பேக் சலுகையுடன் இவை இன்னும் மலிவான விலையில் கிடைக்கத் துவங்கியுள்ளது. ஜியோ சமீபத்தில் புதிய ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது, இது பயனர்களுக்குத் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் 20% கேஷ்பேக் உடன் ஒரு வருடத்திற்கு, அதாவது தொடர்ந்து எந்த டஹ்கவையும் இன்றி 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Customers Confused After Recent Change In JioMart Maha Cashback Offer And Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X