Home
News

குற்றம் சொன்ன ஏர்டெல், அம்புட்டு பேருக்கும் ஆப்பு வைத்த ஜியோ..!

By Muthuraj

ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற இந்தியாவின் அனைத்து மிகப்பெரிய நெட்வெர்க்குகளின் கர்வத்தையும், ஆணவத்தையும் அழித்து, அவர்களின் நிலைப்பாட்டையும், நம்பிக்கையும் அசைத்து பார்க்கும் அளவு மாபெரும் வாடிக்கையாளர்கள் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி விட்டது - ரிலையன்ஸ் ஜியோ.

நேற்று வரை நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு திரிந்த இந்தியாவின் மாபெரும் நெட்வெர்க் நிறுவனங்கள் இப்போது கூட்டாய் ஒரே எதிரியை சந்தித்து கொண்டிருக்கின்றன, ஜியோவை சமாளிக்க வரிசையாய் சலுகைகளையும், விலைக்குறைப்பையும் வழங்கிய பெரு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ மீது குறை கூறி குற்றம் சாட்டவும் தவறவில்லை.

அழைப்பு தோல்வி :

அழைப்பு தோல்வி :

ரிலையன்ஸ் ஜியோவின் புதியஇணைப்பு புள்ளிகளில் அழைப்பு தோல்விகள் (call failures) ஏற்படுகிறது என்று நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மீதான தனது புகாரை அறிவித்தது.

உடனடியாக பதில் :

உடனடியாக பதில் :

இதற்கு உடனடியாக பதில் வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ இதுவொரு "போட்டி எதிர்ப்பு நடத்தை" என்று ஏர்டெல் நிறுவனம் மற்றும் பிற நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

பதிலடி :

பதிலடி :

உடன் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நெட்வெர்க்குகளில் நாடு முழுவதும் சுமா 52 கோடி அழைப்பு தோல்விகளை சந்தித்துள்ளது என்றும் பதிலடி கொடுத்துள்ளது.

இலவச சுனாமி :

இலவச சுனாமி :

உடன் ஜியோ ஒரு "இலவச சுனாமி டிராஃபிக்கை" வழங்குகிறது என்றும், டிராய்-ல் சமர்ப்பித்த புகாரில் ஜியோ நெட்வெர்க்கை "தவறாக" பயன் படுத்துகிறது என்றும் ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

 கட்டுப்பாடு :

கட்டுப்பாடு :

இதற்கு பதில் அளித்த ஜியோ "எங்கள் சேவை மீதும் அதன் தரம் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதன் மூலம் டிராய் கட்டுப்பாடுகளுடனான இணக்கம் வெளியாகிறது" என்று கூறியுள்ளது.

200 அழைப்புகளுக்கு 1 அழைப்பு :

200 அழைப்புகளுக்கு 1 அழைப்பு :

உடன் இணைப்பு புள்ளிகளின் நெரிசலால் ஒவ்வொரு 200 அழைப்புகளுக்கு 1 அழைப்பு என்ற விகிதத்தின் மேல் அழைப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் ஜியோ விளக்கமளித்துள்ளது.

நிலைமை  :

நிலைமை :

"மறுபக்கமோ குறிப்பிடத்தக்க கடந்த சில வாரங்களாக பிற ஆப்ரேட்டர்களின் நிலைமை மோசமாகிவிட்டது, 100 அழைப்புகளில் 75 அழைப்புகள் தோல்வியை சந்திக்கின்றன" என்று ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.

52 கோடி அழைப்பு தோல்வி :

52 கோடி அழைப்பு தோல்வி :

கடந்த 10 நாட்களில் மட்டுமே 22 கோடி அழைப்பு தோல்விகளை ஏர்டெல் சந்தித்துள்ளது, ஒட்டுமொத்தமாக ஏர்டெல் உடன் வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் 52 கோடி அழைப்பு தோல்விகளை சந்தித்துள்ளனர் என்ற பகீர் குற்றச்சாட்டையும் ஜியோ அளித்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மவுனம் கலைத்த அம்பானி : 4 மாதம் கழித்து என்ன விலை கொடுக்க வேண்டும்.?
ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா : 4ஜி சேவை கட்டண ஒப்பீடு
இண்டெர்நெட் கட்டணத்தில் கைவைத்த ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஐடியா..!

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio claims over 52 crore call failures from Airtel, Vodafone, Idea. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X