ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி- 2022 பிறக்கவே இல்ல அதுக்குள்ளயா?- குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் ரத்து!
சமீபத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தன. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் சில சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதன்படி பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை மட்டுமின்றி அதன் வாடிக்கையாளர்களை ஆச்சியப்படுத்தும் வகையில் ஜியோ ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால் அந்த திட்டத்தை தற்போது திரும்பப் பெற்றிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
ரூ.1 விலையில் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்தது. பின் இதில் வழங்கப்பட்ட பலன்களை நிறுவனம் குறைத்து அறிவித்தது. இருப்பினும் வழங்கப்பட்ட பலன்கள் குறைத்த பிறகும் இந்த திட்டம் கவர்ச்சிகரமானதாகவே இருந்தது. தற்போது ஜியோ இந்த குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்தாத காரணத்தால் திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டம் 100 மெகாபிக்சல் அதிவேக 4ஜி டேட்டாவை வழங்கியது. இந்த தரவு 30 நாட்களுக்கு கிடைக்கும். பயனர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப இந்த நன்மை கிடைக்கும் என கூறப்பட்டது. அறிமுகம் செய்த சில காலத்திலேயே ஜியோ இந்த திட்டத்தின் பலன்களை குறைத்தது. அதாவது இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவானது 30 நாட்களில் இருந்து 1 நாளாக குறைக்கப்பட்டது. அதேபோல் 100 எம்பி டேட்டா 10 எம்பி வேகமான 4ஜி டேட்டாவாக மாற்றப்பட்டுள்ளது. ஜியோ 90% நன்மையை குறைத்து அறிவித்தது.

10 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டி
ரூ.1 திட்டத்தில் டெலிகாம் சந்தை பெரும் அதிர்ச்சியில் உறைந்தது என்றே கூறலாம். ஜியோ நிறுவனம் தற்போது இந்த திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. எனவே மாற்றியமைக்கப்பட்ட 10 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் கிடைக்காது. காரணம் தற்போது தொலைத்தொடர்பு ஆபரேட்டர் இந்த மலிவான திட்டத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மைஜியோ ஆப்-ல் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

336 நாட்கள் வேலிடிட்டி
ரூ.1 திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் ரூ.1 திட்டம் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, ஜியோ ஹேப்பி நியூ இயர் 2022 சலுகையை வெளியிட்டது. ஹேப்பி நியூ இயர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 2, 2022 வரை ஜியோ தனது ரூ.2545 திட்டத்தின் மூலம் தற்போதுள்ள 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடுதலாக 29 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. ஹேப்பி நியூ இயர் சலுகையில் கிடைக்கும் பிற பலன்களின் விவரங்களை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1 ரீசார்ஜ் திட்டம் கிடைக்காது
டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது, எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் வழங்கிடாத மிக மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும். தேவைக்கு அதிகமாக டேட்டா பெற விரும்பாத குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்பட்டது. ரூ.1 ரீசார்ஜ் திட்டம் என்பது தனியார் நிறுவனங்கள் எதுவும் தங்கள் பயனர்களுக்கு வழங்கிடாத வசதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி வேகத்தில் 100 எம்பி டேட்டா
ரூ.1 ப்ரீபெய்ட் பேக் திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் காலவரையோடு 100 எம்பி டேட்டா வழங்கப்பட்டது. இந்த வவுச்சரை பயன்படுத்தி 10 முறை ரீசார்ஜ் செய்தால் ரூ.10 செலவாகும்., இதன் அடிப்படையில் 30 நாட்களுக்கு தினசரி 100 எம்பி என்ற அடிப்படையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ ரூ.15-க்கு 1ஜிபி 4ஜி வேக டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூ.1-க்கு 100 எம்பி டேட்டா என்றால் ரூ.10-க்கு 1ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த 100 எம்பி டேட்டா 4ஜி வேகத்தில் கிடைத்த பிறகு இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.

மலிவான ப்ரீபெய்ட் சலுகை
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கும் முதல் ஆபரேட்டராக மாறி இருக்கிறது. டெலிகாம் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது நாட்டில் உள்ள எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும். தேவைக்கு அதிகமாக டேட்டா பயன்படுத்தாத குறைந்த வருமானம் கொண்டவர்கள் இது மிகவும் பேருதவியாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயரத்தின. குறிப்பாக இந்நிறுவனம் 20 சதவிகிதம் வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படிரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications