ஜியோ கால் ட்ராப் சிக்கலில் நல்ல முன்னேற்றம், வேறென்ன முன்னேற்றங்கள்.?
ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சமீபத்திய கால் ட்ராப் அறிக்கையின் படி, விகிதங்கள் 28% குறைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சந்தையில் நுழைந்த விரைவிலேயே கால் ட்ராப் மற்றும் மோசமான நெட்வெர்க் போன்ற காரணங்களினால் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்பல கசப்பான நாட்களை கடந்து கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ வெளியீட்டு நிகழ்வின் போது, முகேஷ் அம்பானி ஜியோ நெட்வொர்க் ஆனது வரம்பற்ற இணைய உலாவுதல் மற்றும் குரல் அழைப்புகளை வழங்கும் என்று கூறினார். எனினும், ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்திய நுகர்வோர்கள் பல பிரச்சினைகளை பற்றிய புகார்களை மட்டுமே அளித்த வண்ணம் உள்ளனர். முக்கியமாக கால் ட்ராப் பிரச்சினையை அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

பெரும்பாலான நேரம்
ஆம், அறிக்கைகளின்படி ஜியோ பயனர்கள் தங்களது ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்கும் பெரும்பாலான நேரம் அழைப்புகளை இணைக்க முடியவில்லை என்று புகார் அளித்துள்ளனர்

குறைத்துவிட்டதாக அறிவித்துள்ளது
இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட ரிலையன்ஸ் ஜியோ செயல்முறை மூலம் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கால் ட்ராப் ஆய்வறிக்கை அடிப்படையில் 28% வரை கால் ட்ராப் குறைத்துவிட்டதாக அறிவித்துள்ளது.

கூடுதல் இணைப்பு புள்ளிகள்
ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுடனான கூடுதல் இணைப்பு புள்ளிகள் சார்ந்த ஒப்பந்தம் நடந்த பிறகு இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் கால் ட்ராப் பிரச்சனை சற்று குறைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

30 கோடி ஜியோ அழைப்புகளில்
நவம்பர் 7 வரையிலாக ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியாவிற்கு விடுக்கப்பட்ட 30 கோடி ஜியோ அழைப்புகளில் கிட்டத்தட்ட 8.5 கோடி அழைப்புகள் மட்டுமே கால் ட்ராப் சிக்கலுக்குள் விழுந்துள்ளன என்று ரிலையன்ஸ் ஜியோ அதன் வலைத்தளத்தில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.

வோடாபோன் அழைப்பு தோல்வி
சமீபத்திய தகவல்களின்படி, 13.81 கோடி ஏர்டெல் மீதான ரிலையன்ஸ் ஜியோ அழைப்புகளில் கிட்டத்தட்ட 34% கால் டிராப் சிக்கலை ஏற்பட்டுள்ளது அதேசமயம் வோடாபோன் அழைப்பு தோல்வி விகிதமானது 8.79 கோடி அழைப்புகளில் 26.7% தோல்வி அழைப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஐடியா செல்லுலார்
ஜியோவின் கால் ட்ராப் பற்றிய சமீபத்திய தகவல்களின்படி ஐடியா செல்லுலார் உடன் தான் மிகக் குறைந்த அளவிலான அழைப்பு தோல்வி விகிதம் உள்ளது என்று காட்டுகிறது. ஐடியா அழைப்பு விகிதம் தோல்வியானது 7.48 கோடி அழைப்புகளில் 18.9% கால் ட்ராப் சிக்கலை சந்தித்துள்ளது.

காரணம்
எக்னாமிக் டைம்ஸ் படி, ஒரு ஜியோ அதிகாரி கால் ட்ராப் சிக்கல்களின் நிலைமை மேம்படுத்தபடுகிறது மற்றும் வரும் சில வாரங்களில் ஒரு நல்ல நிலையை ஜியோ அடையும் என்று கூறியுள்ளார். போட்டியாளர்கள் கூடுதல் இணைப்பு புள்ளிகளை கொண்டு வந்ததே அழைப்பை தோல்வி விகிதங்களுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க
ஏர்டெல் இனி இலவச வரம்பற்ற அழைப்புகளை அளிக்காது. ஏன்.?


Click it and Unblock the Notifications