எல்லாமே உங்களுக்காக: எடுத்ததை அப்படியே கொடுத்த ஜியோ- ரூ.98 விலையில் டேட்டா, குரலழைப்பு இன்னும் பல!
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டராக இருக்கிறது. ஜியோ அறிமுகம் செய்த குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. குறைந்த கட்டண ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜியோ தற்போது ரூ.98 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கடந்த ஆண்டு மே மாதம் இந்த திட்டத்தை நிறுத்தியது. ரூ.98 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் மலிவான விலை திட்டமாக இருக்கிறது. இந்த திட்டமானது 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஜியோவின் ரூ.98 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.98 ரீசார்ஜ் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குகிறது. இந்த நன்மைகளுடன் கூடுதலாக ரிலையன்ஸ் ஜியோ ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் மேலே குறிப்பிட்டுள்ளதுபோல் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டமானது மாதத்தில் பாதி நாட்களுக்கு செல்லுபடியாகும்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதையடுத்து பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் நிதி நிலைமை மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. ஏணையோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதேபோல் பலரின் வீட்டில் தங்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு இணைய தேவை பிரதானமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மலிவான திட்டங்களை தேடும் பயனர்களுக்கு ஜியோ ரூ.98 திட்டத்தை திரும்பக் கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா அணுகலும், தேவைக்கேற்ப அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.

ரூ.98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ரூ.98 திட்டத்தை ஜியோ திரும்பக் கொண்டுள்ளது. குறைந்த வருமானம் உடையவர்களுக்கு ஜியோ ரூ.98 திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல் கோவிட் நிவாரண நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதேபோல் இந்த ரூ.98 ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ திரும்பப் பெற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. மலிவான காம்போ திட்டமாக ரூ.98 ரீசார்ஜ் திட்டம் ஆகும். ரூ.98 ரீசார்ஜ் திட்டமானது பயனர்களை அதிகரிக்கவும், இருக்கும் பயனர்களை தக்கவைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற சலுகைகள் ரூ.98 திட்டம்
ஜியோபோன் முன்னதாகவே பயனர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது. கோவிட் 19 நிவாரண நடவடிக்கைகளில் கீழ் இந்த சலுகை வழங்கப்பட்டது. ஜியோ செயல்படாத பயனர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. டெலிகாம் ஆபரேட்டர் வழங்கும் சலுகைகளில் கேஷ்பேக், ஜியோ ப்ரைம், பாராட்டு ரீசார்ஜ் சலுகை, ஜியோ போன் பாராட்டு நிமிடங்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

கேஷ்பேக் சலுகை
கேஷ்பேக் தள்ளுபடி வடிவில் வரும் என தெரிவிக்கப்படுகிறது. மை ஜியோ பயன்பாட்டின் மூலம் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. ரூ.199 பேக் ரீசார்ஜ் திட்டமானது ஜனவரிமுதல் செயல்படாத அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. அனைத்து ஜியோ பிரைம் பயனர்களும் இந்த கேஷ்பேக் சலுகையை பெறுவார்கள். இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications