ஜியோ பிராட்பேண்ட் 100 ஜிபி;100எம்பிபிஎஸ்; மேலும் பல நகரங்களில்!
ஜியோ பிராட்பேண்ட் அதிரடி 100ஜிபி ;100எம்பிபிஎஸ்; மேலும் பல நகரங்களில்!
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் சேவையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜியோ தனது பிராட்பேண்ட் சேவையை பல நகரங்களில் விரிவாக்குகிறது. மேலும் பல்வேறு சிறப்புத்திட்டங்களை வழங்கும் நோக்கில் உள்ளது ஜியோ.
அதன்படி ஜியோ பிராட்பேண்ட் சோதனைகள் துவங்கியது என்றும் விரைவில் இவை பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

100 ஜிபி:
தற்போது ஜியோ பிராட்பேண்ட் பொருத்தமாட்டில் மாதத்திற்கு 100ஜிபி தரவு மற்றும் 100எம்பிபிஎஸ் வேகம் அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 100ஜிபி வரம்பு தீர்ந்துவிட்டால், வேகம் 1எம்பிபிஎஸ்க்கு வேகம் குறைக்கப்படும்.

பிராட்பேண்ட்:
அடுத்த சில மாதங்களில் பிராட்பேண்ட் சோதனையை விரிவுபடுத்துவதற்கான திட்டம் வைத்துள்ளது ஜியோ. மேலும் க்யூ1 வருவாய் அழைப்பில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

100எம்பிபிஎஸ்:
ரிலையன்ஸ் ஜியோ எப்டிடிஎச் பிராட்பேண்ட் சேவைகளில் குறைந்தபட்சம் 100எம்பிபிஎஸ் வேகத்தில் இண்டர்நெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. ஜியோவை போன்றே பிராட்பேண்ட் சேவையையும் மலிவு விலையில் வழங்கலாம் என்றும் அறிமுக சலுகையின் கீழ் இலவச சேவைகளும் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ :
அஹமதாபாத், ஜாம்நகர், சூரத்,மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் ஜியோ பிராட்பேண்ட் சேவையை விரிவுப்படுத்துவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எப்டிடிஎச்:
ஜியோ எப்டிடிஎச் பிராட்பேண்ட் சேவைகள் பொருத்தமாட்டில் நொடிக்கு 1ஜிபி என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்குவதோடு பல்வேறு சேவைகளை ஜியோ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புனே:
புனேவில் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவை பொருத்தமாட்டில் அதன் நெட்வொர்க் வேகம் வெளியிடப்பட்டது. தற்போது அதன் வேகம் 734.28 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது.

ஜியோ பிராட்பேண்ட் சேவைகள்:
ஜியோ பிராட்பேண்ட் சேவைகள் ஒருபக்கம் இருக்க ஜியோ டிடிஎச் சேவைகள் மற்றும் இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட சாதனங்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜியோ 4ஜி டெலிகாம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சேவைகளின் கட்டணம் மட்டும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதே போன்று பிராட்பேண்ட் மற்றும் இதர சேவைகளும் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மாதம்:
இந்த சேவையை பயன்படுத்த முதல் மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதன் பின் ஒருமுறை கட்டணமாக ரூ.4500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications