Home
News

அட்டகாச நன்மையுடன் ரூ. 499 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்ததா ஜியோ நிறுவனம்?

இந்தியாவில் இணையச் சேவை மலிவு விலைக்கு வந்ததிலிருந்து நாடு அதன் தேவையில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது. டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பரந்த அளவிலான திட்டங்களையும் சலுகைகளையும் தொடர்ந்து வழங்கு வருகிறார்கள். பயனர்கள் எப்போதும் அதிகமாக டேட்டாவை விரும்புவதால், பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டெல்கோக்கள் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் நன்மைகள் மற்றும் சலுகைகளைத் தொகுத்து வழங்கி, பயனர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

மக்களை ஈர்க்க OTT நன்மைகளுடன் மீண்டும் களமிறங்கிய ரூ. 499 திட்டம்

மக்களை ஈர்க்க OTT நன்மைகளுடன் மீண்டும் களமிறங்கிய ரூ. 499 திட்டம்

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ தனது தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இப்போது OTT நன்மைகளுடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ OTT நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ. 499 என்ற விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுவனம் மீண்டும் தனது பட்டியலில் சேர்த்துள்ளது. இது ஒரு பெரிய OTT தளத்திற்கான அணுகலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் OTT நன்மைகளுடன் வரும் பிற ஜியோ திட்டங்கள் என்னென்ன?

இத்துடன் OTT நன்மைகளுடன் வரும் பிற ஜியோ திட்டங்கள் என்னென்ன?

இந்த திட்டம் இப்போது மீண்டும் சில நன்மைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் OTT இயங்குதளங்களுக்குச் சந்தாக்களை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் பிற திட்டங்களுடன் அதன் பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஜியோவில் இருந்து கிடைக்கும் சில சூப்பர் சலுகையுடன் கூடிய திட்டங்களின் விபரங்களைப் பார்க்கலாம். முதலில் இப்போது ஜியோ நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்துள்ள ரூ. 499 திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜியோ மீண்டும் அறிமுகம் செய்த ரூ. 499 திட்டம்

ஜியோ மீண்டும் அறிமுகம் செய்த ரூ. 499 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் சலுகைகளின் பட்டியலில் ரூ. 499 திட்டத்தைச் சேர்த்துள்ளது. ரூ. 499 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது மற்றும் செல்லுபடியாகும் காலம் வரை ஒவ்வொரு நாளும் இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கிறதா?

இத்துடன் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கிறதா?

இந்த திட்டத்துடன் ஜியோ நிறுவனம் கூடுதல் நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டத்தை வாங்குவதன் மூலம் புதிய பயனர்கள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான சந்தாவையும் பெறுவார்கள். அதேபோல், ஒரு நாளைக்கு 2 ஜிபி என்று நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வரம்பைப் பயனர் பயன்படுத்தி முடித்த பிறகு, பயனர்களுக்கு வழங்கப்படும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க அனுமதிக்கும். இந்த நன்மைகளுக்குக் கூடுதலாக, இந்த ரூ. 499 ப்ரீபெய்ட் திட்டமானது Disney+ Hotstar அணுகலுடன் வருகிறது.

ரூ. 499 திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையா?

ரூ. 499 திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையா?

இந்தத் திட்டத்தை வாங்குவதன் மூலம், பயனர்கள் OTT இயங்குதளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருடத்திற்கு ரூ.499 மதிப்பிலான சந்தாவைப் பெறலாம். இந்த திட்டம் ஜியோ சினிமா , ஜியோ டிவி மற்றும் பல போன்ற சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. ரூ. 499 திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது ஜியோ பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஜயோ நிறுவனம் நம்புகிறது.

ஜியோவின் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் பிற ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 601 விலையில் OTT அணுகலுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலம் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் தினமும் 3GB டேட்டாவை வழங்குகிறது. தினசரி 3ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 6ஜிபி டேட்டாவையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஜியோவின் ரூ.601 திட்டமானது, ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான சந்தாவுடன் கூடுதல் விலையின்றி வருகிறது.

ஜியோவின் ரூ. 799 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ. 799 ப்ரீபெய்ட் திட்டம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வருடாந்திர சந்தாவுடன் வரும் இரண்டாவது திட்டம் ரூ. 799 திட்டமாகும். கட்டண உயர்வுக்குப் பிறகு இந்தத் திட்டம் அதன் முந்தைய விலையான ரூ. 666 இலிருந்து திருத்தப்பட்டு இப்போது இந்த புதிய விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புத் திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டமானது வேறு சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது.

ஜியோவின் ரூ.1,066 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.1,066 ப்ரீபெய்ட் திட்டம்

பட்டியலில் அடுத்ததாக 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கும் மற்றொரு திட்டமாகும். இது ரூ.1,066 விலையில் வருகிறது. கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த திட்டம் அதன் முந்தைய விலையான ரூ. 888 இல் இருந்து திருத்தப்பட்டது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருட சந்தா மற்றும் ஜியோ டிவி மற்றும் இன்னும் சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலுடன் இந்தத் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்கள் திட்டத்துடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

ஜியோவின் ரூ.3,119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.3,119 ப்ரீபெய்ட் திட்டம்

ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வரும் கடைசி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டமாகும். ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கும் திட்டமானது அதன் முந்தைய விலையான ரூ. 2,599ல் இருந்து திருத்தப்பட்ட ரூ.3,119 விலையில் இப்போது வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் மற்றும் இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS பெறுகிறார்கள். மொத்தம் 730ஜிபி தினசரி டேட்டாவுடன், இந்தத் திட்டம் கூடுதலாக 10ஜிபி அதிவேக டேட்டாவையும் சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Brings Back Rs 499 Plan with OTT Benefit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X