ரூ.199, ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ஜியோ தரும் கூடுதல் சலுகை.!
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பின் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சலுகைகளை பெற்று வருவது தெரிந்ததே.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.198 மற்றும் ரூ.399 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் டேட்டாவுடன் கூடிய புதிய சலுகைகளை வாரி வழங்க முன்வந்துள்ளது.

ஜியோ நிறுவனம்
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பின் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சலுகைகளை பெற்று வருவது தெரிந்ததே. கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் கால் வைத்த ஜியோ நிறுவனம் அதன்பின்னர் பல்வேறு பிளான்களின் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. மூன்று வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னும் அந்த சலுகைகளை ஜியோ தொடர்ந்து வருகிறது

ரூ.198 மற்றும் ரூ.399
ஜியோ பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தற்போது சில புதிய சலுகைகளை தர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.198 மற்றும் ரூ.399 ஆகிய இரண்டு வித ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் சலுகைகளுடன் சேர்த்து தற்போது புதிய சில சலுகைகளளயும் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ஏற்கனவே ஏர்டெல் மற்றும் வோடோபோன் வாடிக்கையாளர்கள் அனுபவித்து வரும் சலுகைகள் என்பது குறிப்பிடத்தக்கது

ஐந்து மடங்கு AJIO கூப்பன் கிடைக்கும்
இந்த இரண்டு தொகைகளில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் புதிய சலுகைகள் குறித்து தற்போது பார்ப்போம்;
ஒருமுறை ஜியோவில் ரூ.198 ரீசார்ஜ் செய்தால் அந்த தொகையை விட ஐந்து மடங்கு AJIO கூப்பன் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் இந்த கூப்பனின் மதிப்பு ரூ.999. இந்த கூப்பனை பயன்படுத்தி இந்த தொகைக்கு வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம்

ரூ.1399 மதிப்பிற்குரிய AJIO கூப்பன்
அதேபோல் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அதே தொகையை அதாவது ரூ.399 தொகையில் ஐந்து மடங்கு அதாவது ரூ.1399 மதிப்பிற்குரிய AJIO கூப்பன்களை பெற்றுக்கொண்டு தேவையான பொருட்களை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் மற்றும் AJIO சலுகைகள் கூப்பன்கள் AJIO.காம் என்ற இணையதளத்திற்கு சென்று பயன்படுத்தி கொள்ளலாம்.

பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
இந்த சலுகைகளை ஜியோவில் ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் மேலும் இந்த ரூ.198 மற்றும் ரூ.399 திட்டங்கள் போஸ்ட் பெய்டு வடிக்கையாளர்களும் ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ளலாம். இந்த சலுகையை ஜியோவின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ கிரிக்கெட் செஷன் ஸ்பெஷன் டேட்டா பேக்
பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோ இவ்வாறான சிறப்பு திட்டங்கள் அளிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ஜியோவில் ரூ.251 ரீசார்ஜ் செய்தால் மிகப்பெரிய டேட்டாக்களை அதாவது 51 நாட்களுக்கு 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்ற சலுகையை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளானுக்கு ஜியோ கிரிக்கெட் செஷன் ஸ்பெஷன் டேட்டா பேக் என்பது ஆகும். இந்த திட்டம் கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.


Click it and Unblock the Notifications