ஜியோ வாடிக்கையாளர்களே: அன்லிமிடெட் டேட்டா, கால்., மலிவு விலை அட்டகாச திட்டங்கள் இதோ!
ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் குரல் அழைப்புகள் வழங்கும் மலிவு விலை திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கு
ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இணைய சேவை அதிகரிப்பு
ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டிலேயே தேங்கும்நிலையால் இணைய சேவை அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து ஜியோ வழங்கும் மலிவு விலையிலான சிறந்த திட்டங்கள் ஏணைய உள்ளது. இதில் ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ.199
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 விலையில் கிடைக்கும் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதோடு பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகளும், தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரூ.399 விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டமானது 2000 நிமிட பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகள் வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகளோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரூ.444 விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.444 விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா என 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் 56 நாட்கள் வரை 2000 நிமிடங்கள் பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகளோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications