Home
News

ஜியோ அடிச்சா டைரக்ட்டா நெத்தியடி தான்.. இலவச Netflix.. இலவச 5G டேட்டா.. அட்டகாச நன்மைகள்..

ரிலையன்ஸ் ஜியோ (reliance jio) தனது வாடிக்கையாளர்களுக்கு பல மகத்தான திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் OTT ரசிகர்களை கவரும் வகையில் சில சிறப்பான திட்டங்களையும் ஜியோ இப்போது வழங்கி வருகிறது. இலவச நெட்பிலிக்ஸ் சந்தைவாய் கூட வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ் நன்மையுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது. இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் முதல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ அடிச்சா டைரக்ட்டா நெத்தியடி தான்.. இலவச Netflix.. இலவச 5G டேட்டா!

டெலிகாம் நிறுவனங்கள் OTT (Over-The-Top) இயங்குதள சந்தாக்களை தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் நன்மையாக வழங்குவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், பல டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பாக நெட்ஃபிளிக்ஸின் நன்மையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்பதே உண்மையாகும். ஆனால், ஜியோ அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் நெட்ஃபிக்ஸ் நன்மையை வழங்குகிறது.

ஜியோ சமீபத்தில் அறிவித்த தகவலின் படி, ஜியோவின் ரூ.1099 மற்றும் ரூ.1499 திட்டங்கள் அதன் பயனர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அணுகலை கூடுதல் கட்டணமின்றி பெற அனுமதிக்கின்றன. இந்த திட்டங்கள் வழங்கும் நன்மை என்ன? இத்துடன் கிடைக்கும் எக்ஸ்டரா இலவச நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ 1099 திட்டம்: (Jio Rs 1099 Prepaid Plan)
ஜியோவின் ரூ.1099 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன் ஜியோவிடமிருந்து நீங்கள் 5G வெல்கம் ஆஃபரைப் பெறுவீர்கள்.

ஜியோ அடிச்சா டைரக்ட்டா நெத்தியடி தான்.. இலவச Netflix.. இலவச 5G டேட்டா!

இதன் கீழ் வரம்பற்ற 5G டேட்டாவை அனுபவிக்கலாம். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா (Netflix Mobile), ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற இலவச நன்மைகளையும் இந்த திட்டத்துடன் ஜியோ வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ 1499 திட்டம்: (Jio Rs 1499 Prepaid Plan)
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1499 திட்டமும் நிறுவனத்திடமிருந்து 5ஜி வெல்கம் ஆஃபருக்கு தகுதியுடையது. இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 40ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கிறது.

ரூ.1099 மற்றும் ரூ.1499 திட்டங்கள் இரண்டிலும், பயனர் FUP வரம்பிற்கு பிறகு டேட்டா வேகம் 64 Kbps ஆகக் குறையும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பற்றி பேசுகியில், இது நெட்பிளிக்ஸ் பேசிக்ஸ் (Netflix Basic), ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.1499 திட்டத்தில், நீங்கள் அதிக டேட்டாவைப் பெறுவது மட்டுமல்லாமல், Netflix மொபைலுக்குப் பதிலாக நெட்பிளிக்ஸ் அடிப்படைச் சந்தாவையும் பெறுவீர்கள். இது அவர்களின் ஸ்மார்ட்ஃபோனைத் தவிர வேறு சாதனத்தில் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த விஷயமாகும். நெட்பிளிக்ஸ் சந்தாவை தனியாக வாங்க விருப்பம் இல்லாதவர்கள், டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நமையுடன் நெட்பிளிக்ஸ் சந்தாவை இலவசமாக பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Best Prepaid Plan With Free Netflix Subscription and Unlimited 5G Data and Voice Calling Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X