அதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.!

தொலைத்தொடர்பு துறையில் உள்ள கடும் போட்டியிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் 4ஜி நெட்வொர்க்கில் கடந்த மே மாதத்தில் அதிக வேக நெட்வொர்க்கை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

|

தொலைத்தொடர்பு துறையில் உள்ள கடும் போட்டியிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் 4ஜி நெட்வொர்க்கில் கடந்த மே மாதத்தில் அதிக வேக நெட்வொர்க்கை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.!

டிராய் அமைப்பின் டேட்டாவின்படி ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் 22.3 Mbps ஆக கடந்த மே மாதம் இருந்துள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. இந்தியாவில் அதிக வேக நெட்வொர்க்கை தரும் நிறுவனம் என்று கூறப்படும் ஏர்டெல் இந்த அறிக்கையின்படி 9.7 Mbps வேகத்தில் மட்டுமே சேவை செய்துள்ளது.

மேலும் வோடோபோன் மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்கள் முறையே 6.7 Mbps மற்றும் 6.1 Mbps வேகத்தில் தான் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் அதிகவேக அப்லோட் வேகம் கொண்ட நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றுளது.

அதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.!

இந்த நிலையில் ஜியோ தற்போது எம்ஜியோ என்ற புதிய மாடல் போன் அறிவிப்பு ஒன்றை ஜூலை 20ஆம் தேதி மாலை 5.01 மணிக்கு அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள எந்த மாடல் போனாக இருந்தாலும் அதை கொடுத்துவிட்டு எக்சேஞ்ச் ஆபராக ஜியோ போன் மாடலை பெற்று கொள்ளலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.501 கொடுத்தால் போதும்

இந்தியாவில் ஏற்கனவே 25 மில்லியன் பேர் ஜியோ போனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த புதிய ஹங்பா சலுகையால் மேலும் மில்லியன் கணக்கானோர் ஜியோ போனை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இதன் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டையும் டிஜிட்டல் வாழ்க்கை தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

அதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.!

மேலும் இந்த புதிய ஜியோ போனில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவற்றின் செயலிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செயல்பட தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோபோன் 2 வரும் 41வது ஆண்டு பொது கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய போன் 2.4 இன்ச் உடன் QVGA டிஸ்ப்ளேவுடன் குவார்ட்டி கீபேட் உடன் 4வே நேவிகேஷனுடன் கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Reliance Jio beats incumbent telcos TRAI MySpeed Data: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X