சீன கம்பெனிகளை பேக்கில் ஓடவிட்ட அம்பானி.. உலகின் நம்பர் 1 நெட்வொர்க்காக Jio.. 4400 கோடி GB டேட்டாவா.. அம்மாடி!
இந்தியாவில் மட்டும் முன்னணி நெட்வொர்க்காக இருந்து வந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இப்போது உலகின் நம்பர் 1 நெட்வொர்க்காக (World's number 1 network) மாறியுள்ளது. உலக சந்தையில் முன்னணியில் இருந்த சீன நெட்வொர்க் நிறுவனங்களை இப்போது முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பின்னுக்கு தள்ளி, உலகத்தின் அதிக டேட்டா பயன்பாட்டை கொண்ட முதல் முன்னணி நெட்வொர்க்காக ஜியோ (Jio) சாதனை படைத்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மறுபடியும் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த முறை உலகளவில் சாதனை படைத்து, மற்ற உலக நாடுகளின் கவனத்தை ஜியோ நிறுவனம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, டேட்டா உபயோகத்தில் (data usage) உலகளாவிய தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.

சீன கம்பெனிகளை பேக்கில் ஓடவிட்ட அம்பானி.. உலகின் நம்பர் 1 நெட்வொர்க்காக மாறிய Jio:
ஜியோவின் காலாண்டு முடிவுகள் (quarterly results from Jio) இந்த சாதனையை வெளிப்படுத்தியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ, டேட்டா நுகர்வில் மற்ற அனைவரையும் விஞ்சி உலகளவில் முன்னணி நெட்வொர்க்காக (World's leading data usage network) மாறியுள்ளது. காலாண்டில், ஜியோ நெட்வொர்க் தரவு நுகர்வு 44 எக்சாபைட்கள் (44 exabytes) ஆக பதிவாகியுள்ளது. இதுவொரு அபார பயன்பாடு என்பதில் சந்தேகமில்லை.
அதாவது, சரியாக சொல்ல வேண்டுமென்றால், 4400 கோடி ஜிபி டேட்டாவை (4400 crore GB data) தாண்டி ஜியோ பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சாதனை இதற்கு முன்பு சீன நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மைல்கல் மூலம், சீன நிறுவனங்களையும் (China companies), உலக டெலிகாம் துறையில் (World telecom industries) முன்னிலையில் இருந்த ஜாம்பவான்களையும் ஜியோ நிறுவனம் இப்போது பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஜியோ (Jio) நிறுவனத்தின் கூற்றுப்படி, ஜியோ பயனர்கள் இப்போது மாதத்திற்கு 30.3 ஜிபி டேட்டாவைப் (30.3 GB data) பயன்படுத்துகின்றனர். இது ஒவ்வொரு நாளும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிக்கிறது. ஜூன் காலாண்டில், ஜியோவின் தரவு நுகர்வு கடந்த ஆண்டு இதே காலாண்டில் 33.2 பில்லியன் ஜிகாபைட்களுடன் (Gigabytes) ஒப்பிடுகையில் 32.8 சதவீதம் அதிகரித்து 44 பில்லியன் ஜிகாபைட்களாக தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளது.
உலகத்தின் அதிக டேட்டா டிராபிக் கொண்ட நெட்வொர்க் ஜியோ சாதனை:
டேட்டா டிராபிக் (Data traffic) என்று அழைக்கப்படும் தரவு போக்குவரத்தின் அடிப்படையில் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளதாக ஜியோ தகவல் அளித்துள்ளது. இந்த முதல் இடத்தை இதற்கு முன்பு சீன நிறுவனங்கள் மாறிமாறி சொந்தம் கொண்டாடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு (Free voice calls) உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ (Jio) விரைவாக உயர்ந்துள்ளது.
தற்போது, உலகம் முழுவதும் சுமார் 49 கோடி ஜியோ பயனர்கள் உள்ளனர். இவர்களில் 13 கோடி பேர் ஜியோவில் 5ஜி பயனர்கள் என்று கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. டேட்டா நுகர்வில் ஜியோ உலக அளவில் முன்னணியில் இருந்தாலும், 5ஜி சேவைகளில் சீனாவை விட பின்தங்கியுள்ளது என்பதில் எந்தவித மறுப்பும் இல்லை. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோவை வழிநடத்தி அதன் வரம்பை விரிவுபடுத்த அயராது உழைத்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








