கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!

|

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்த பின்னர், இதே போன்ற அறிவிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களை தொழில்துறையில் மலிவானதாக வைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களின் விலை அதிகரிக்கிறதா?

ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களின் விலை அதிகரிக்கிறதா?

இது சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) கணிசமாக அதிகரிக்க உதவும். இதே காரணத்தை இதற்கு முன்பு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் இந்த விலை உயர்வைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஜியோவின் பெரும்பாலான பிரபலமான திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது.

எப்போதிலிருந்து இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் செயல்பாட்டில் களமிறங்கும்?

எப்போதிலிருந்து இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் செயல்பாட்டில் களமிறங்கும்?

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்படக் கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் படி, ஜியோ நிறுவனத்தின் அடிப்படை திட்டமான ரூ. 75 மதிப்புள்ள திட்டமானது இப்போது அறிவிக்கப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ஜியோ பயனர்களுக்கு ரூ. 91 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும்.

Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..

ரூ. 129 திட்டத்தின் புதிய விலை என்ன? கிடைக்கும் நன்மைகள் என்ன?

ரூ. 129 திட்டத்தின் புதிய விலை என்ன? கிடைக்கும் நன்மைகள் என்ன?

அதேபோல், ஜியோவிடம் இருந்து கிடைக்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ. 129 என்ற விலை திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 155 செலவில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டம் 2ஜிபி மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது ஏர்டெல் மற்றும் ஜியோவின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டங்களை விட எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சற்று மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ. 149 திட்டம் மற்றும் ரூ. 199 திட்டத்தின் புதிய விலை என்ன?

ஜியோவின் ரூ. 149 திட்டம் மற்றும் ரூ. 199 திட்டத்தின் புதிய விலை என்ன?

ஜியோவின் ரூ. 149 என்ற விலை திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 179 செலவில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டம் தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதே போல், நிறுவனத்தின் ரூ. 199 திட்டமானது இனி விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 239 என்ற விலையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஆலிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS கிடைக்கிறது.

குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..

ரூ. 249 மற்றும் ரூ. 399 விலை திட்டத்தின் நன்மைகள் என்ன? புதிய விலை என்ன?

ரூ. 249 மற்றும் ரூ. 399 விலை திட்டத்தின் நன்மைகள் என்ன? புதிய விலை என்ன?

ஜியோ இதற்கு முன் வழங்கிய ரூ. 249 விலை திட்டம் இனிமேல் விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 299 என்ற விலையில் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நம்மை, தினமும் 100 SMS நன்மை கிடைக்கும். ஜியோவின் ரூ. 399 விலை திட்டம் இனி ஜியோவிடம் இருந்து ரூ. 479 என்ற விலையில் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கிடைக்கும். இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பி, தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ. 444 திட்டம் மற்றும் ரூ. 395 திட்டத்தின் புதிய விலை

ரூ. 444 திட்டம் மற்றும் ரூ. 395 திட்டத்தின் புதிய விலை

ஜியோவின் ரூ. 444 விலை திட்டம் இனி ரூ. 533 விலை 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கும். இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நம்மை, தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. ஜியோவின் ரூ. 329 விலை திட்டமானது இனி ரூ. 395 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும். இந்த திட்டம் மொத்தமாக 6 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

பிரபலமான இந்த இரண்டு திட்டங்களின் விலையும் அதிகரிப்பு

பிரபலமான இந்த இரண்டு திட்டங்களின் விலையும் அதிகரிப்பு

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இரண்டு ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள், 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் ரூ. 555 மற்றும் ரூ. 599 விலை கொண்ட கட்டண திட்டங்கள் விலை உயர்வுக்குப் பிறகு முறையே ரூ. 666 மற்றும் ரூ. 719 விலைக்குக் கிடைக்கும். அதே திட்டங்களுடன் ஒப்பிடுகையில். பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi), ஜியோவின் திட்டங்கள் கணிசமாக மலிவானதாக இருக்கிறது. இந்த திட்டங்கள் முறையே தினமும் 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

நீண்ட வேலிடிட்டி உடைய திட்டங்களின் விலையும் அதிகரிப்பு

நீண்ட வேலிடிட்டி உடைய திட்டங்களின் விலையும் அதிகரிப்பு

அதேபோல் ஜியோவிடம் இருந்து கிடைக்கும் நீண்ட நாள் திட்டங்களான ரூ. 1299 திட்டம் மற்றும் ரூ. 2399 திட்டங்களின் விளையும் அதிகரித்துள்ளது. இந்த 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டங்கள் இனி முறையே ரூ. 1559 விலை மற்றும் ரூ. 2879 விலையில் கிடைக்கும். ரூ. 2879 விலை திட்டமானது தினமும் 2ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த விலை மாற்றம் வரும் டிசம்பர் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்துடன், டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

என்ன சார் இதெல்லாம்- ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு!என்ன சார் இதெல்லாம்- ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு!

ஜியோவின் டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் விளையும் அதிகரிப்பா?

ஜியோவின் டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் விளையும் அதிகரிப்பா?

ரூ.51, ரூ.101 உட்பட ரூ. 251 ஆகிய மூன்று டேட்டா வவுச்சர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவால் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு ரூ.61, ரூ.121 மற்றும் ரூ.301 விலைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து மொத்தம் 15 ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்போது விலை உயர்வைப் பெற்றுள்ளன. இது டிசம்பர் 1, 2021 முதல் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தொழில்துறையில் மலிவான திட்டங்களை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Announces Prepaid Tariff Plan Hike After Airtel And Vodafone Idea In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X