ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் அறிவிப்பு!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது, இந்த கேஷ்பேக் சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ரூ.398 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும்
வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி
அதன் கட்டணத்திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அதிரடி கேஷ்பேக் சலுகை ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

கேஷ்பேக்:

கேஷ்பேக்:

ஜியோ தற்சமயம் அறிவித்துள்ள ரூ.700 கேஷ்பேக் ரூ.400 மற்றும் ரூ.300 என இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட டிஜிட்டல் வாலெட்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  8 வவுச்சர்கள்:

8 வவுச்சர்கள்:

ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் தொகையை பொறுத்தவரை ஜியோ நிறுவனம் ரூ.50 மதிப்புடைய 8 வவுச்சர்களை வழங்குகிறது. மேலும் இந்த வவுச்சர்களை கொண்டு ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தும் ரூ.91 அல்லது அதற்கும் மேல் ஆட்-ஆன் உள்ளிட்டவற்றை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைஜியோ :

மைஜியோ :

வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.400 மதிப்புடைய வவுச்சர்கள் உடனடியாக சேர்க்ப்பட்டு விடும்,அதன்பின்பு மைஜியோ செயலியின் வவுச்சர்கள் பிரிவில் வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.

100 சதவீதம்:

100 சதவீதம்:

ஜியோ வழங்கும் Jio More than 100% Cashback Offer தொகையை குறிப்பிட்ட ஜியோ எண்ணிற்கு அதிகபட்சம் ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 மொபிகுவிக்:

மொபிகுவிக்:

இந்த கேஷ்பேக் சலுகையின் கீழ் ஜியோ அமேசான் பே, மொபிகுவிக், பீம் மற்றும் ஃபிரீசார்ஜ் போன்ற வாலெட் சேவைகளுடன் இணைந்திருக்கிறது. இந்த வாலெட் சேவைகள் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 மதிப்புடைய உடனடி கேஷ்பேக் வழங்குகின்றன.

இனி ரூ.149/-க்கு கிடைக்கும் :

இனி ரூ.149/-க்கு கிடைக்கும் :

ரூ.199/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை நாள்
ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio announces More than 100 percent cashback offer Everything you need to know ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X